லட்சங்களில் தடுமாறும் நீக்; கோடிகளை குவித்த டிராகன் - 4ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

1 day ago
ARTICLE AD BOX

தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் ஆகிய படங்களின் நான்காம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Dragon vs NEEK

தமிழ் சினிமாவில் கடந்த பிப்ரவரி 21ந் தேதி தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும், பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த டிராகன் திரைப்படமும் போட்டி போட்டு ரிலீஸ் ஆனது. இதில் டிராகன் திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து இருந்தார். அதேபோல் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்து இருந்தது.

Dragon movie Box Office

ரிலீசுக்கு முன்னர் இரண்டு படங்களின் டிரைலருக்குமே செம வரவேற்பு கிடைத்ததால், ரசிகர்கள் மத்தியில் இரு திரைப்படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை டிராகன் படம் மட்டுமே பூர்த்தி செய்துள்ளது. மறுபுறம் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் சொதப்பலான திரைக்கதையால் ரசிகர்களை ஈர்க்க தவறிவிட்டது. இந்த இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... விடாமுயற்சி படத்தின் வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய டிராகன்!

Dragon 4th Day Box Office Collection

அதன்படி பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த டிராகன் திரைப்படம் மூன்று நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் மூன்று நாட்கள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடி வசூலித்து இருந்தது. அதேபோல் ஆந்திராவில் ரூ.5.75 கோடியும், கர்நாடகாவில் ரூ.3.5 கோடியும், இந்தியாவின் இதர மாநிலங்களில் ரூ.75 லட்சமும், வெளிநாடுகளில் ரூ.15 கோடியும் வசூலித்து இருந்தது. இந்நிலையில், 4ம் நாளான நேற்று மட்டும் இப்படம் ரூ5 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. இதன் மூலம் தற்போதுவரை டிராகன் திரைப்படம் ரூ.55 கோடி வசூலித்து இருக்கிறது.

Nilavuku En Mel Ennadi Kobam Box Office Collection

அதேபோல் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் சொதப்பி வருகிறது. இப்படம் முதல் நாளில் ரூ.1.5 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.2 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.1.4 கோடியும் வசூலித்திருந்த நிலையில், நான்காம் நாளில் இப்படத்தின் வசூல் அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது. திங்கட்கிழமை இப்படம் வெறும் ரூ.46 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளதாம். இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் நீக் திரைப்படம் இதுவரை வெறும் 5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... டிராகன் புயலில் சிக்கி சின்னாபின்னமான தனுஷ் படம்

Read Entire Article