ரோஹித் சர்மாவுக்கு என்னாச்சி.? நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

22 hours ago
ARTICLE AD BOX
Rohit sharma

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் ஓடி கொண்டிருக்கும் போது தொடை பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து அப்போது மைதானத்தில் சிறிது பிசியோதெரபி போன்ற சிகிச்சை பெற்று அவர் களத்திற்கு திருப்பினார். அன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, அடுத்ததாக வரும் ஞாயிற்று கிழமை அன்று நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இதற்கான பயிற்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், நேற்று வரை கேப்டன் ரோஹித் சர்மா தசை பிடிப்பு காரணமாக பயிற்சியில் ஈடுபடவில்லை. அவருக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் வலை பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஜாக்கிங் மட்டுமே மேற்கொண்டார் என கூறப்படுகிறது.

இதனால், ரோஹித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஏனென்றால், மேற்கண்ட போட்டியை அடுத்து செவ்வாய்கிழமை சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது.

இந்த அரையிறுதி போட்டி மிக முக்கியமானது என்பதாலும், இந்தியா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றது என்பதால் நியூசிலாந்துக்கு எதிரான ரிசல்ட் பாதிக்காது என்பதால் ரோஹித் சர்மாவுக்கு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கவே அதிக வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஒருவேளை ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், துணை கேப்டன் சுப்மன் கில் கேப்டனாக செயல்படுவார் என்றும், ரோஹித்திற்கு பதில் கே.எல்.ராகுல், கில் உடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது. ரோஹித்திற்கு பதிலாக ரிஷப் பன்ட் அணியில் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது.

இதனடிப்படையில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11-ல், சுப்மன் கில், கே.எல்.ராகுல், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article