ARTICLE AD BOX
New Aprilia Tuono 457 twin-cylinder bike to be launched: இன்றைய இளைஞர்கள் பலரும் பைக் மோகத்தில் இருக்கிறார்கள். சாலைகளில் சாகசம் செய்யாமல் பாதுகாப்பாக ஓட்டினால் நல்லது. பைக் விரும்பும் இளைஞர்களுக்காக, ஏப்ரிலியா நிறுவனம் புதிய டுவோனோ 457 பைக்கை இந்தியாவில் வெளியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏப்ரிலியா டுவோனோ 457 இரட்டை இன்ஜின் பைக் வெளியாகிறது.
ஏப்ரிலியா நிறுவனம் டுவோனோ 457 பைக்கை இந்தியாவில் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய புதிய பைக்கை சோதனை செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. அப்போதே,ஏப்ரிலியோ நிறுவனம் இந்த புதிய டுவோனோ 457 பைக்கை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற EICMA 2024 நிகழ்வில் ஏப்ரிலியோ நிறுவனம் இந்த டுவோனோ 457 பைக்கை முதலில் அறிமுகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து, இந்த பைக்கை இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.
ஏப்ரிலியோ நிறுவனத்தின் 450 சிசி பைக்கான RS 457 இந்தியாவில் விற்பனையில் இருக்கிறது. இதனுடன் ஒப்பிடும் போது, 450 சிசி பைக்கான RS 457-யின் நேக்கட் வடிவமாக இருக்கிறது டுவோனோ 457 பைக். இந்த இரண்டு மாடலைலும் அதே 457 சிசி, பேரலல் ட்வின் இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த என்ஜின் 47.6hp பவர் மற்றும் 43.5Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதனுடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்சுடன் கூடிய, 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் விரும்பினால், பை-டேரக்ஷனல் க்விக் வசதியையும் கூடுதலாக பெற்றுக் கொள்ளலாம். டுவோனோ 457 பைக் 12.7 லிட்டர் எரிபொருள் டேங்குடன், 175 கிலோ எடையைக் கொண்டது.
RS 457 பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரானிக் வசதிகள், ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய 5 இன்ச் TFT டிஸ்பிளே, ABS, ட்ராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் த்ராட்டில் சென்ஸிட்டிவிட்டியை அட்ஜஸ்ட் செய்யும் மூன்று ரைடிங் மோடுகள் ஆகிய அம்சங்கள் அனைத்தும் டுவோனோ 457 பைக்கிலும் கொடுக்கப்படும். இந்த வசதிகளுடன் ரெட் மற்றும் கிரே என இரண்டு நிறங்களில் டுவோனோ 457 பைக் வருகிறது.
இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் கே.டி.எம் 390 டியூக், யமஹா MT-03, எஃப் இசட் ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக ஏப்ரிலியோ நிறுவனத்தின் இந்த புதிய டுவோனோ 457 பைக் வருகிறது. RS 457 பைக்கானது ரூ.4.20 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த டுவானோ 457 பைக் அதைவிட சற்றுக் குறைவாக ரூ.4 லட்சம் விற்பனை செயய்ப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.