ரோகித் கேப்டன்சியில் அதிருப்தி.. மீண்டும் கோலியை ஏற்குமாறு கேட்ட கம்பீர்! வெளியான தகவல்!

2 hours ago
ARTICLE AD BOX
Published on: 
08 Feb 2025, 1:20 pm

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வி என்பது இன்னும் அணையாத நெருப்பாகவே இருந்துவருகிறது.

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

தன்னுடைய டெஸ்ட் பேட்டிங்கில் ஃபார்மை இழந்த ரோகித் சர்மா, அதை அவருடைய கேப்டன்சியிலும் வெளிப்படுத்தி வருகிறார். பொதுவாக ஒரு வீரர் கேப்டனாகும் போது பேட்டிங்கில் ஃபார்மை இழப்பது சாதாரணம் தான் என்றாலும், அந்த வீரர் கேப்டனாக வெற்றியை பெறுவார்.

ஆனால் ரோகித் சர்மா விசயத்தில் பேட்டிங், கேப்டன்சி என இரண்டு பக்கமும் அடிவாங்கிய நிலையில், சிகப்பு பந்து கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் தரம் மீண்டும் சோதனைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

விராட் கோலி
விராட் கோலி

இந்நிலையில் அடுத்த 4 மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட் தொடரில் மீண்டும் கோலியை கேப்டனாக்கும் முயற்சியில் கவுதம்கம்பீர் இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் கோலியிடமே திரும்பிய கம்பீர்..

வெளியாகியிருக்கும் தகவலின் படி, ’விராட்டின் ஆக்ரோஷமான கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது, குறிப்பாக வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்தது. புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சி தொடங்கவிருக்கும் நிலையில், இந்திய அணி அடுத்த டெஸ்ட் கேப்டனை தேடுகிறது. ஆனால் அடுத்த வரிசையில் இருக்கும் ஜுனியர் வீரர்களுக்கு இன்னும் அனுபவம் தேவைப்படுவதால், அதுவரை இடைப்பட்ட காலத்தில் மீண்டும் விராட் கோலியிடமே கேப்டன்சியை ஒப்படைக்கும் முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுத்துள்ளது.

விராட் கோலியே இதற்கு பொருத்தமானவராக இருப்பார் என்பதால், கோலியே மீண்டும் டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டும் என்ற யோசனையை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் ஆதரித்துள்ளார். ஆனால் விராட் கோலி இன்னும் தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தவில்லை’ என mykhel-ல் வெளியான ஒரு அறிக்கை கூறுகிறது.

விராட் கோலி
விராட் கோலி

பும்ராவிற்கு பணிச்சுமையை அதிகரித்து மீண்டும் அவரை காயத்திற்கு தள்ள இந்திய அணி தயாராக இல்லை என்பது தெரிகிறது. அதேநேரத்தில் ரோகித் சர்மாவின் ரெட்பால் கேப்டன்சியில் கம்பீர் அதிருப்தி அடைந்திருப்பதும் வெளிப்பட்டுள்ளது.

இந்தியாவை 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியிருக்கும் விராட் கோலி 58.82 வெற்றி சதவீதத்துடன் சிகப்பு பந்து கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக இருந்துள்ளார். கேப்டனாக 68 டெஸ்ட் போட்டிகளில் 40 போட்டிகளில் வெற்றி, 11 போட்டிகளில் சமன் மற்றும் 17 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார் விராட் கோலி.

Read Entire Article