ARTICLE AD BOX
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜோகுலம்பா மாவட்டம், காட்வால் பகுதியில் வசித்து வருபவர் நவீன் (வயது 25). இவர் திருநங்கை ஒருவருடன் காதல் வயப்பட்டார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
இந் நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நவீனின் தந்தை முன்னதாகவே இயற்கை எய்திவிட்டார்.
இதனிடையே, திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது தந்தையின் கல்லறை அருகே விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்து இருந்தார்.
இதையும் படிங்க: தூக்கில் துள்ளத்துடித்த உயிர்.. 5 நிமிடத்தில் இளம்பெண்ணை காப்பாற்றிய காவலர்கள்.. குவியும் பாராட்டுக்கள்.!
உயிருக்கு ஆபத்தான நிலையில், இளைஞரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன் உயிரிழந்தார்.
மேலும் , அவரின் உடலில் சந்தேகத்திற்குரிய வகையில் ரத்த காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியை கொன்று குக்கரில் சமைத்த கணவன்.. ஹைதராபாத்தில் நெஞ்சை நடுங்கவைக்கும் சமபவம்.!