ARTICLE AD BOX
நடிகர் நேத்ரன் சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் உயிரிழந்தார். இந்நிலையில், நடிகையும் அவரது மனைவியுமான தீபா தன் கணவரின் மரணத்துக்கு முன் நடந்தது என்ன என்பதை கண்ணீர் மல்கப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நேத்ரன். பின், சின்னத்திரையில் பல சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றார். சில சீரியல்களில் வில்லனாகவும் மாறுபட்ட நடிப்பைக் காட்டி அசர வைத்திருக்கிறார். புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த நடிகர் நேத்ரன் கடந்த ஆண்டு காலமானார்.
நேத்ரனின் மனைவியான நடிகை தீபா முன்னணி சேனல்களின் சீரியல்களில் நடித்து வருகிறார். கணவர் நேத்ரன் மறைவுக்குப் பிறகு, தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகள் அபிநயாவும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
நேத்ரன் இறப்புக்கு முன்பு அதிகமாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையைக் குறைத்துவிட்டார் என்றும் அப்போது அவருடைய எடை வெறும் 36 கிலோ வரை வந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்நிலையில் நடிகை தீபா பேட்டி ஒன்றில் தன் கணவரின் மரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நேத்ரனுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது. அதற்காக ஹோமியோபதி மருந்து எடுத்துக்கொண்டார். அவருக்கு ஹோமியோபதி மீது நிறைய நம்பிக்கை இருந்தது. இது தவிர, 4 ஆண்டுகளாகவே அடிக்கடி வயிற்று வலியுடனும் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அதற்கும் சிகிச்சையை எடுத்துக்கொண்டார்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம்தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனையில் அனுமதித்து நான்கு மாதமாக சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, ஆபரேஷனுக்குப் பின் போட்ட தையல் பிரிந்துவிட்டது. தையல் பிரிந்ததால் ஹீமோ சிகிச்சை அளிக்க முடியவில்லை.
நான்கு ஆண்டுகளாக வயிற்று வலி இருந்த நிலையில், ஆரம்பத்திலேயே ஸ்கேன் எடுத்துப் பார்த்திருந்தால் நேத்ரனைக் காப்பாற்றி இருக்கலாம். அதைச் செய்யாமல் பெரிய தவறு செய்துவிட்டோம் என நடிகை தீபா வேதனையுடன் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.