ரோகித் உங்களுக்கு வேணாமா?.. அப்ப மாடலிங் பண்றவங்கள கூட்டிட்டு வாங்க – கவாஸ்கர் விமர்சனம்

3 hours ago
ARTICLE AD BOX

தற்போது ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கும் இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டுக்கும் ஒல்லியான உடலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அதிரடியாக பேசியிருக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தற்போது கிரிக்கெட் விளையாடுவதற்கு தகுதியற்றவராக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருப்பதாகவும், அவருக்கு இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவதற்கான உடல் தகுதி கிடையாது எனவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனத்திற்கு எழுந்த பதிலடி

இதைத்தொடர்ந்து அவருடைய கருத்துக்கு அரசியல் வட்டத்தில் இருந்தும் கிரிக்கெட் வட்டத்தில் இருந்தும் நிறைய பதிலடிகள் வர ஆரம்பித்தது. தற்போது இந்திய அணி சாம்பியன் டிராபி தொடரில் நாக் அவுட் சுற்றில் இருக்கும் பொழுது இப்படியான கருத்துக்கள் அணியை பாதிக்கலாம் என்றும் சில கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய விமர்சனத்தை முன் வைத்திருந்தார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியின் லெஜன்ட் சுனில் கவாஸ்கர் ஏற்கனவே உடல் பருமன் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஒரு தடை கிடையாது என வலியுறுத்தி வரக்கூடியவராக இருந்திருக்கிறார். இந்த விஷயத்தில் அவர் சர்ப்ராஸ் கானுக்கு ஆதரவாக ஆரம்பத்தில் இருந்து பேசி வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ரோஹித் சர்மாவுக்கும் ஆதரவாக பேசியிருக்கிறார்.

மாடலிங்கில் போய் ஆள் தேடுங்கள்

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “நான் எப்போதும் சொல்வது என்னவென்றால் உங்களுக்கு ஒல்லியான ஆட்கள்தான் தேவை என்றால் நீங்கள் மாடலிங்கில் போய் ஆட்களை தேர்வு செய்யுங்கள். நாம் இங்கு யார் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார்கள்? என்று தான் பார்க்க வேண்டும். அவர் உடல் அளவு எவ்வளவு இருக்கிறது? என்று பார்க்க கூடாது”

“இதேபோல்தான் சர்பராஸ் கான் உடல் பருமனாக இருக்கிறார் என்று கூறி அவரை இந்திய அணியில் இருந்து வெளியில் வைத்திருந்தார்கள். பிறகு இந்திய அணிக்கு அவர் வந்து ஒரு 150 ரன்கள் ஒரு முக்கிய போட்டியில் எடுத்தார். மேலும் அவர் மூன்று அல்லது நான்கு அரை சதங்களையும் அடித்திருக்கிறார்”

இதையும் படிங்க : நாங்க இந்திய அணியை தோற்கடிப்போம்.. அழுத்தம் அவங்களுக்குதான்.. காரணம் இதான் – பிராட் ஹேடின் பேட்டி

“இங்கு நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் ஒரு வீரர் விளையாடும் விதத்தையும் அவர் ரன்கள் எடுக்கும் விதத்தையும்தான். நீங்கள் அதிக நேரம் களத்தில் நின்று அதிக ரன்கள் எடுக்க முடியும் என்றால் உடல் அளவு என்பது ஒரு பிரச்சனையே கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

The post ரோகித் உங்களுக்கு வேணாமா?.. அப்ப மாடலிங் பண்றவங்கள கூட்டிட்டு வாங்க – கவாஸ்கர் விமர்சனம் appeared first on SwagsportsTamil.

Read Entire Article