பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: 5 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர்கள் முதலிடம்

3 hours ago
ARTICLE AD BOX

பிராக்: செக்குடியரசு நாட்டில் 7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சக நாட்டவரான அரவிந்த் சிதம்பரம் உடன் மோதினார்.

இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதுவரை 5 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் தலா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார்கள். வெய் யி, நெதர்லாந்தின் அனிஷ்கிரி உள்பட 4 வீரர்கள் தலா 2.5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார்கள்.

The post பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: 5 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர்கள் முதலிடம் appeared first on Dinakaran.

Read Entire Article