ARTICLE AD BOX
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி மார்ச் 4ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துபாயில் துவங்கியது. அதில் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா மற்றும் பி பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணிகள் மோதின. கடைசியாக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் இவ்விரு அணிகளும் மோதின.
அதில் இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. எனவே உலகச் சாம்பியனாக திகழும் வலுவான ஆஸ்திரேலியாவை இப்போட்டியில் தோற்கடித்து அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது. அந்த சூழ்நிலையில் துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
டாஸ் வென்ற ஆஸி:
மறுபுறம் ஏற்கனவே 2023 உலகக்கோப்பை ஃபைனல் உட்பட கடைசி 14 ஒருநாள் போட்டிகளில் இந்தியா டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்தது. அதனால் தொடர்ந்து அதிகப் போட்டிகளில் டாஸ் தோல்வியை சந்தித்த அணியாக இந்தியா மோசமான உலக சாதனையை ஏற்கனவே படைத்துள்ளது. அந்த சூழ்நிலையில் இந்த நாக் அவுட் போட்டியிலும் இந்தியாவுக்கு டாஸ் அதிர்ஷ்டம் கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
ஆனால் நாங்கள் அனைத்துக்கும் தயாராக வந்துள்ளதாகவே இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். குறிப்பாக என்ன செய்யலாம் என்ற தெளிவான சூழ்நிலை தெரியாத போது டாஸ் வீசுவதில் தோல்வியை சந்திப்பதே சிறந்தது என்று ரோகித் நேர்மறையுடன் பேசியுள்ளார். மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் ரோகித் கூறியுள்ளார்.
இந்தியா தயார்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் இரண்டுக்குமே தயாராக வந்துள்ளேன். நீங்கள் குழப்பமாக இருக்கும் போது டாஸ் வீசுவதில் தோல்வியை சந்திப்பதே சிறந்தது. பிட்ச் தொடர்ந்து தன்னுடைய இயற்கையை மாற்றிக் கொண்டே வருகிறது. எனவே நீங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இங்கு நாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம்”
இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியிலிருந்து தோனி போயிட்டா நஷ்டம் யாருக்கு தெரியுமா? – விரிதிமான் சஹா கருத்து
“அதையே இன்றும் செய்ய முயற்சிக்க உள்ளோம். இது சவாலானதாக இருக்கும். நாங்கள் அதே அணியுடன் விளையாடுவோம். கடந்தப் போட்டியில் விட்டதிலிருந்து தொடர விரும்புகிறோம். தற்போது நாங்கள் முதலில் பவுலிங் செய்கிறோம். நன்றாக பவுலிங் செய்து முடிந்தளவுக்கு ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
The post செமி ஃபைனல்: இது தெரியதாப்போ டாஸ் தோற்றதே நல்லது.. நாங்க அந்த 2க்கும் தயார்.. ரோஹித் பேட்டி appeared first on Cric Tamil.