IND vs AUS: குல்தீப் யாதவை ஒரே நேரத்தில்... கடுமையாக திட்டிய ரோஹித், விராட் - ஏன்?

2 hours ago
ARTICLE AD BOX

India Vs Australia Semi Final Live: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை விளையாடப்படாத ஆடுகளத்தில் போட்டி நடைபெறுகிறது.

India Vs Australia: அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட்

இந்திய அணி எவ்வித மாற்றத்தையும் செய்யாத நிலையில், ஆஸ்திரேலிய அணி அதன் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்களை செய்தது. மேட் ஷார்ட் காயத்தால் விலகியதால் கூப்பர் கோனோலி அணியில் சேர்க்கப்பட்டார். ஸ்பென்சர் ஜான்சனுக்கு ஓய்வு வழங்கப்பட்டு தன்வீர் சங்காவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஓப்பனிங்கில் கோனோலி டக்அவுட்டாக, டிராவிஸ் ஹெட் ஆரம்பத்தில் மிக பொறுமையாக விளையாடினார். முதல் 24 பந்துகளில் 21 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. அதற்கு பின் ரன் வேட்டையை தொடங்கினார் ஹெட். முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா இருவரையும் வெளுத்து வாங்கிய அவர் அடுத்து வந்த குல்தீப் யாதவையும் விட்டுவைக்கவில்லை.

India Vs Australia: வலையில் சிக்கவைத்த வருண் சக்ரவர்த்தி

தொடர்ந்து, 9வது ஓவரை வீச வந்தார் வருண் சக்ரவர்த்தி. முதல் பந்தில் ஸ்டீவ் ஸ்மித் 1 ரன்னை எடுத்தார். அடுத்த பந்தில், அதாவது வருணை சந்தித்த முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட் லாங்-ஆஃப் திசையில் தூக்கி அடிக்க சுப்மன் கில் அதனை அருமையாக கேட்ச் பிடித்தார். அவர் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

India Vs Australia: கலக்கிய ஜடேஜா

இதையடுத்து, லபுஷேன் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 சிறு இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் ஜடேஜா வீழ்த்தினார். அலெக்ஸ் கெரியும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் அருமையாக பார்ட்னர்ஷிப்பை அமைத்து பெரிய ஸ்கோரை நோக்கி சென்றனர்.

India Vs Australia: ஸ்மித், மேக்ஸ்வெல் அடுத்தடுத்து அவுட்

ஆனால், முகமது ஷமி அதற்கு முட்டுக்கட்டைப்போட்டார். ஷமி வீசிய 37வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள ஆட்டமிழந்தார். அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரை மட்டுமே அடித்திருந்தார். அவரை தொடர்ந்து, வந்த மேக்ஸ்வெல் அக்சர் பட்டேலின் பந்தை சிக்ஸர் அடித்து இந்திய அணியை அச்சுறுத்தினார். ஆனால், அக்சர் பட்டேல் முந்தைய பந்தை விட வேகமாக அடுத்த பந்தை வீசி அவரது ஸ்டம்பை பதம்பார்த்தார். மேக்ஸ்வெல் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 

ஆஸ்திரேலிய அணி 48 ஓவர்களில் 252 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அலெக்ஸ் கேரி 71 ரன்களில் ஷ்ரேயாஸ் ஐயரின் அற்புதமான த்ரோவால் ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

India Vs Australia: குல்தீப்பை திட்டிய கோலி, ரோஹித்

அந்த வகையில், குல்தீப் யாதவ் 32ஓவரை வீசி வந்தார். அந்த ஓவரின் 5வது பந்தில் ஸ்மித் பார்வட் ஸ்கொயர்  லெக் திசைக்கு அடித்தார். அந்த நீண்ட  தொலைவில் இருந்து விராட் கோலி பந்துவீச்சாளரான குல்தீப் யாதவுக்கு அருமையாக த்ரோ அடித்தார். ஆனால், குல்தீப் யாதவ் அந்த பந்தை பிடிப்பது போல் சென்று கடைசியில் பிடிக்காமல் கையை எடுத்துவிட்டார். இருப்பினும் பேக்அப்பாக ரோஹித் சர்மா இருந்தார்.

குல்தீப் யாதவ் அப்படி செய்ததும் தூரத்தில் இருந்து விராட் கோலியும், அருகில் இருந்து ரோஹித் சர்மாவும் ஒரே நேரத்தில் குல்தீப் யாதவை கடுமையாக வசைபாடினர். இது கேமராவில் பதிவானது. இருவரும் களத்தில் குல்தீப் யாதவின் தவறால் கடுமையாக அதிருப்தி அடைந்தது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது. இதுபோன்ற சிறிய சிறிய தவறுகளையும் சாதகமாக எடுத்து ஸ்மித் ரன் எடுக்கக் கூடியவர் என்பதால் ரோஹித் அந்தளவிற்கு ஆக்ரோஷப்பட்டார் எனலாம்.

Rohit Sharma and Virat Kohli both got angry on Kuldeep Yadav for not stopping the ball pic.twitter.com/ppUCuHcfG4

— Radha (@Rkc1511165) March 4, 2025

India Vs Australia: வைரலாகும் வீடியோ

இதேபோல், 42வது ஓவரிலும் குல்தீப் யாதவ் த்ரோவை பிடிக்காமல் விட, ரோஹித் சர்மா மீண்டும் தனது அதிருப்தியை வெளிக்காட்டினார். அதே ஓவரில் த்வார்ஷுயிஸ் சிக்ஸர் அடிக்க ரோஹித் சர்மா மிகவும் கடுப்பானார் எனலாம். ஏற்கெனவே, ரோஹித் சர்மா குல்தீப் யாதவின் மீது கோபமுடன் வசைபாடும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தின் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

மேலும் படிக்க | IND vs AUS: சுப்மன் கில் பிடித்த கேட்ச்சால் பரபரப்பு.. எச்சரித்த நடுவர்! வீடியோ வைரல்!

மேலும் படிக்க | IND vs AUS: டிராவிஸ் ஹெட் இல்லை! இந்திய அணியின் முக்கிய 3 வில்லன்கள் இவர்கள் தான்...

மேலும் படிக்க | "ரோகித் சர்மா குண்டா இருக்காரு": Body shaming-ஆல் வந்த வினை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article