ARTICLE AD BOX
ரெடியா இருங்க.. பட்ஜெட்ல 200எம்பி கேமரா.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது புதிய Redmi போன்..
ரெட்மி நிறுவனம் அடுத்து புதிய ரெட்மி நோட் 14எஸ் (Redmi Note 14S) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் இந்த புதிய ரெட்மி போனின் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரெட்மி நோட் 14எஸ் அம்சங்கள் (Redmi Note 14S Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி77 அல்ட்ரா சிப்செட் வசதியுடன் ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு HyperOS 2.0 UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.
குறிப்பாக 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த புதிய ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
200எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
5000mAh பேட்டரி வசதியுடன் ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
இதுதவிர சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த ரெட்மி போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி ரெட்மி நோட் 14எஸ் ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.