ரூ.600 கோடி கிரிப்டோ வழக்கில் ஈடி ரெய்டு

2 hours ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச் இணையதளமாக காயின்பேசை போன்ற போலியான இணையதளத்தை பயன்படுத்தி ரூ.173 கோடி மோசடி செய்துவிட்டதாக சிராக் தோமர் என்ற இந்தியரை அமெரிக்கா கைது செய்துள்ளது. இந்த தகவல் அடிப்படையில் நடந்த விசாரணையில் ரூ.600 கோடி மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி சட்டவிரோதமாக மாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.2 கோடிக்கும் அதிகமான வங்கி டெபாசிட்களை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

The post ரூ.600 கோடி கிரிப்டோ வழக்கில் ஈடி ரெய்டு appeared first on Dinakaran.

Read Entire Article