ரூ.1500 கோடி கடனில் சென்னை மாநகராட்சி

22 hours ago
ARTICLE AD BOX
சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (27.02.2025) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர், ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தொடரில் சென்னை மாநகராட்சியின் மொத்த கடன் எவ்வளவு, வட்டி எவ்வளவு என பாஜக உறுப்பினர் உமா ஆனந்த கேள்வி எழுப்பினார்.

இதற்கு மேயர் பிரியா விளக்கம் அளித்தார். அதில், சென்னை மாநகராட்சியின் கடனாக ரூ.1,488.50 கோடி உள்ளது. 1.1.2025 வரை சென்னை மாநகராட்சிக்கு ரூ.3,065.65 கோடி கடன் இருந்தது. தற்போது ரூ1,577.10 கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ள நிலையில் ரூ.1,488.50 கோடி அளவிலான கடன் நிலுவையில் உள்ளது.

சென்னை மாநகராட்சியின கடனுக்கு சராசரியாக மாதம் ரூ. 8.50 கோடி வட்டி செலுத்தப்படுகிறது என மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.


Read Entire Article