ARTICLE AD BOX

நில அளவை செய்ய இணையத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் எம் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது., நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் நில அளவைக் கட்டணம் உள்ளிட்ட கட்டணத்தை, இணையவழியிலேயே செலுத்தலாம். நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு, எஸ்.எம்.எஸ்., அல்லது மொபைல் போனில் தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடத்தை மனுதாரர், https://eservices.tn.gov.in/என்ற இணையம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
The post நிலம் அளக்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம் ! – திருச்சி கலெக்டர் சொன்ன ” குட் நியூஸ் ” ! appeared first on Rockfort Times.