ARTICLE AD BOX
ரூ.14.65 லட்சம் சம்பளம் வாங்கினாலும் பூஜ்ஜிய வரி தான்.. புதிய வரி முறையின் அசத்தலான வாய்ப்பு!
மத்திய அரசு 2025-26 ஆம் ஆண்டுக்கான வருமான வரி மாற்றங்களை அறிவித்துள்ளது. அடுத்தடுத்த வருமான வரி மாற்றங்களால் சம்பளம் பெறும் மக்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. இதில் புதிய வரி முறையின் கீழ் சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஒரு தனிநபர் ரூபாய் 14.65 லட்சம் வருமானம் ஈட்டினாலும், சரியான வரி திட்டமிடலின் மூலம் பூஜ்ஜிய வரி செலுத்த முடியும். இது நடுத்தர வர்க்கத்தினருக்கும் சம்பளம் பெறும் மக்களுக்கும் மிகப் பெரிய நன்மை தரும். இந்த புதிய வரி திட்டம் எப்படி செயல்படுகிறது, எந்த வழிகளில் வரியை குறைக்கலாம் என்பதற்கான முழுமையான விளக்கத்தை இங்கே காணலாம்.

புதிய வரி முறையின் கீழ், ரூபாய் 12 லட்சம் வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை. மேலும், சில கழிவுகளை பயன்படுத்தி, ரூபாய் 14.65 லட்சம் வருமானம் இருந்தாலும் கூட பூஜ்ஜிய வரி செலுத்தலாம். இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு பெரிய அளவில் நிவாரணம் கிடைக்கிறது.சில முக்கியமான கழிவுகள் மற்றும் முதலீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், வரி விதிக்கக்கூடிய வருமானத்தை குறைத்து, எந்தவித வரியும் செலுத்தாமல் இருந்துவிடலாம். இதனால் சம்பளம் பெறும் மக்களுக்கு அதிக நன்மை கிடைக்கிறது.
Tax2Win நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் சோனி கூறியதாவது, சரியான கழிவுகளைப் பயன்படுத்தினால், வரி விதிக்கக்கூடிய வருமானம் குறைக்கப்பட்டு, பூஜ்ஜிய வரியைப் பெறலாம் என்று கூறினார்.
மொத்த ஆண்டு வருமானம் (CTC):14,65,000 ரூபாய் அடிப்படை சம்பளம். (CTC-யில் 50%): ரூபாய் 7,32,500 NPS முதலாளி பங்களிப்பு (அடிப்படையில் 14%): ரூபாய் 1,02,550. EPF முதலாளி பங்களிப்பு (அடிப்படையில் 12%): ரூபாய் 87,900 நிலையான விலக்கு: ரூபாய் 75,000 வரி விதிக்கக்கூடிய வருமானம் (கழிவுகளுக்குப் பிறகு): ரூபாய் 11,99,550
இந்த கணக்கீட்டின் மூலம், வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூபாய் 12 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதால், புதிய வரி முறையின் கீழ் பூஜ்ஜிய வரியைப் பெற முடியும்.
புதிய வரி முறையின் கீழ் ரூபாய் 75,000 நிலையான கழிவாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் அனைத்து சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கும் நிவாரணம் கிடைக்கிறது. பிரிவு 80CCD(2) இன் கீழ், ஒரு நிறுவனத்திலிருந்து பெறும் அடிப்படை சம்பளத்தின் 14% வரை NPS-ல் முதலீடு செய்தால், அதற்கான வரி விலக்கு கிடைக்கும். பழைய வரி முறையில் இந்த வரம்பு 10% மட்டுமே. முதலாளி EPF-க்கு செலுத்தும் தொகை (அடிப்படை சம்பளத்தில் 12%) வரி விலக்கு பெறும்.2025-26 வருமான வரி அடுக்குகள். புதிய வரி முறையில் வருமான வரி அடுக்குகள் மாற்றப்பட்டுள்ளன.
தற்போது பொருந்தும் வரி விகிதங்கள் : ரூபாய் 0 - ரூபாய் 4 லட்சம் ( வரி இல்லை), ரூபாய் 4 லட்சம் - ரூபாய் 8 லட்சம் ( 5% வரி), ரூபாய் 8 லட்சம் - ரூபாய் 12 லட்சம் ( 10%) வரி, ரூபாய் 12 லட்சம் - ரூபாய் 16 லட்சம் ( 15% வரி), ரூபாய் 16 லட்சம் - ரூபாய் 20 லட்சம் ( 20%) வரி, ரூபாய் 20 லட்சம் - ரூபாய் 24 லட்சம் ( 25% வரி), ரூபாய் 24 லட்சம் மற்றும் அதற்கு மேல் (30%) வரி. இந்த புதிய வரி அடுக்குகள் மூலம், நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக நிவாரணம் கிடைக்கிறது
2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்தார். இதில், புதிய வரி முறையின் கீழ் சம்பளம் வாங்கும் மக்களுக்கு முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்றன. சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதால், ரூபாய் 12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களும் பூஜ்ஜிய வரியை அனுபவிக்கலாம். ரூபாய் 75,000 நிலையான கழிவு வழங்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் பயன்படும்.
இந்த மாற்றங்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் நன்மை தரும், மேலும் மக்கள் தங்களின் சேமிப்புகளை அதிகரிக்கவும் உதவும். எனவே, உங்கள் வரியைத் திறமையாக நிர்வாகித்து, அதிக பணத்தை உங்கள் கையில் வைத்திருப்பதற்கான சரியான திட்டங்களை தீட்டுங்கள்!