ARTICLE AD BOX
இன்னும் 35 தினங்கள்தான் இருக்கு... அதுக்குள்ள எப்படி வரியை சேமிக்கலாம்?..
நடப்பு 2024-25ம் நிதியாண்டு நிறைவடைய இன்னும் 35 தினங்களிலே உள்ளது. வரி செலுத்துவோர் ஆண்டுதோறும் தங்கள் வருமான வரி வருமானங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். பொதுவாக ஏப்ரல் 1ம் தேதி முதல் வருமான வரி கணக்கு தாக்கல் தொடங்கி விடும். வரி செலுத்துவோர் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், வருமான வரி கணக்குகளை தயார் செய்யுவற்கு ஆயத்தமாகி விடுவர். எந்த வழிமுறைகளில் வரியை மிச்சப்படுத்தலாம் என்று யோசனை செய்து அதற்கான வேலைகளை மேற்கொள்வர்.
பொதுவாக வரி விலக்கு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது, காப்பீடு எடுப்பது, நன்கொடை வழங்குவது போன்ற வழிமுறைகளில் நாம் வரியை மிச்சப்படுத்த முடியும். வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 80C-ன் கீழ், பிபிஎஃப், என்பிஎஸ் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து வரி சலுகை பெறலாம். இந்த பிரிவின்கீழ் நீங்கள் மொத்தம் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80E-ன் கீழ், நீங்கள் உங்கள் படிப்புக்காக வாங்கிய கல்வி கடனுக்கு நீங்கள் திருப்பி செலுத்தும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.

வரி விலக்கு தகுதியான சேமிப்பு திட்டங்களில் முதலீடு மூலம் உங்கள் வரி குறைவதோடு உங்கள் சேமிப்பும் வளர்ச்சி காணும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-ன் கீழ் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் அல்லது தீவிர நோய் பயனாளிக்கு செலுத்தப்படும் பிரீமியத்திற்கு ஆண்டுத்தோறும் ரூ.1 லட்சம் வரை விலக்குகளை பெறலாம். எனவே மருத்துவ காப்பீட்டை வாங்குவது உங்களது மருத்துவ செலவை குறைப்பதோடு, வருமான வரியை சேமிக்கவும் உதவும்.
பிரிவு 80G-ன் கீழ், லாபமற்ற சங்கங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு பெறலாம். எனவே தாராளமாக நன்கொடை வழங்கி உங்கள் வரியை மிச்சப்படுத்தலாம். 2024-25ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி ஜூலை 31ம் தேதியாக இருக்கும். தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.எனவே வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு அளிக்கப்பட்டுள்ள காலஅவகாசத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது நல்லது.
Story written by: Subramanian