ARTICLE AD BOX
சென்னை: ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், குஷ்பு சுந்தர்.சியின் அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. 1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை, நடைபெற்றது.
இப்படம் அழுத்தமான கதையுடன், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடி எண்டர்டெயினராக உருவாகவுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா முதல்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவர் எடிட்டிங், வெங்கட் ராகவன் வசனம்.