அமெரிக்காவில் இமானின் இன்னிசைத் திருவிழா! எப்போது தெரியுமா?

13 hours ago
ARTICLE AD BOX

அமெரிக்காவில் உள்ள தமிழ்ச்சங்கங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை(ஃபெட்னா) வின் 38வது தமிழ் விழா ஜூலை 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் வடகரோலைனா மாநிலத்தின் ராலே நகரில் நடைபெற உள்ளது.'தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம் ’ எனும் கருப்பொருளுடன், தவத்திரு குன்றக்குடி அடிகளார், தோழர் இரா.நல்லகண்ணு ஆகியோரது நூற்றாண்டு விழாவாக இது கொண்டாடப்படுகிறது.

தமிழ், கலை, இலக்கியம், பண்பாடு, நாடகம், நாட்டியம், கவியரங்கம், அறிவரங்கம், கருத்துக்களம், இலக்கிய விநாடி வினா, பல்சுவை நிகழ்வுகள் , போட்டிகள், தொழில் முனைவோர் மாநாடு, திரைப்பட விழா என பல்சுவை நிரம்பிய விழாவாக அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கான திருவிழாவாக இந்த விழா அமைகிறது.

விழாவின் சிறப்பம்சமாக திரைப்பட  இசையமைப்பாளர் இமான்  வழங்கும் மாபெரும் எழுச்சிமிகு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ”தமிழர்களெல்லாம் ஆர்ப்பரித்திடுவோம். தமிழ்விழா ஓங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசே ! அனைவரும் வாரீர்! பதிவுகள் இனிதே துவக்கம். உடனே விரைந்து பதிந்திடுவீர்!  வாழ்க தமிழ்!” என்று வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் நிர்வாகிகளும் விழா ஒருங்கிணைப்பாளர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்,

மேலதிக தகவல்களை  https://fetna-convention.org/ என்ற இணையத்தளத்தில் காணலாம்

Read Entire Article