சாமி துணையில்லாம எதுவும் முடியாது.. விஷாலை விட்டு சுந்தர் சி நயனை பிடிக்க இதுதான் காரணமா?

7 hours ago
ARTICLE AD BOX

சில தினங்களுக்கு முன்பு மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. அரண்மனை 4 திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் தயாராக போகும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இதற்கு முன்பு மதகஜராஜா திரைப்படம் வெளியானாலும் அது 12 வருடங்களுக்கு முன்பே உருவான திரைப்படம். 12 வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆகி அந்தப் படமும் மாபெரும் வெற்றி அடைந்தது .

மூக்குத்தி அம்மன் 2 படத்தை பொருத்தவரைக்கும் அது கொஞ்சம் சீக்கிரமாகவே ஆரம்பிக்கிறார்கள். இதற்கு முன்னதாக விஷால் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து ஆம்பள 2 திரைப்படத்தை தான் உருவாக்க திட்டமிட்டார்கள். மதகஜராஜா வெற்றிக்கு பிறகு மீண்டும் சுந்தர்சியுடன் விஷால் இணைவதாக இருந்தது. அந்த படம் தான் ஆம்பள 2. ஏற்கனவே ஆம்பள திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த திரைப்படம்.

அதனால் மீண்டும் அந்த காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெறும் என்பதனால் ஆம்பள 2 திரைப்படத்தை எடுக்க நினைத்தார்கள். ஆனால் அந்த படம் இப்போது ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இப்போது சினிமாவின் போக்கே மாறி இருக்கிறது. படம் எப்போது ரிலீஸ் ஆக வேண்டும் என்பதை தீர்மானிப்பதே ஓடிடி நிறுவனம் தான்.

ஆனால் இப்போது நடக்கும் நிலைமையை பார்க்கும் பொழுது படத்தை எப்பொழுது ஆரம்பிக்கலாம் என்பதை தீர்மானிக்கும் முடிவையும் ஓடிடி தான் எடுக்கும் என தெரிகிறது. ஏனெனில் ஆம்பள 2 திரைப்படத்தில் விஷாலுக்கு உரிய சம்பளம், சுந்தர் சிக்கு உரிய சம்பளம் என கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட் 80 லிருந்து 90 கோடி என்ற அளவில் இருந்ததாம். ஆனால் இவ்வளவு கோடி பட்ஜெட்டில் இந்த படமா என நினைத்து ஓடிடி நிறுவனம் 2025 ஆம் ஆண்டு எங்களுடைய பட்ஜெட் முடிந்து விட்டது.

அதனால் இந்த படத்தை 2026 இல் ஆரம்பிக்கலாம் என கூறிவிட்டார்களாம். அதனால் தான் ஆம்பள 2 திரைப்படத்தை விட்டு சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை கையில் எடுத்தார் .அதற்கேற்ப நயன்தாராவும் சீக்கிரமாகவே கால்ஷீட் கொடுத்து விட்டார். கூடிய சீக்கிரம் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும். 2026க்கு பிறகு மீண்டும் விஷால் சுந்தர் சி கூட்டணியில் ஆம்பள 2 திரைப்படம் ஆரம்பமாகும் என சித்ரா லட்சுமணன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Read Entire Article