ARTICLE AD BOX
மும்பை: அமெரிக்காவில் கணவர் நிக் ஜோன்சுடன் வசித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இதனால் எப்போதாவதுதான் இந்தியா வருகிறார். 2000ம் ஆண்டுகளில் இவர் சில சொத்துகளை மும்பையில் வாங்கினார். அதை விற்க முடிவு செய்திருந்தார் பிரியங்கா. அதன்படி அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு இருக்கும் 3 வீடுகளை அவர் ரூ.13 கோடிக்கு விற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பத்திரப்பதிவு இம்மாதம் நடைபெற உள்ளதாம். அமெரிக்காவில் சொந்த பங்களா இருப்பதால் இந்தியாவில் தங்குவதற்கு ஒரு வீடு இருந்தால் போதும் என பிரியங்கா நினைக்கிறாராம். அதற்காக மும்பை அந்தேரியில் உள்ள ஒரு வீட்டை மட்டும் விற்காமல் வைத்துள்ளாராம்.