ARTICLE AD BOX
எளிதில் ஜீரணமாக கூடிய காலை மற்றும் இரவு உணவுகளில் புட்டு வகையும் ஒன்று. மிகவும் சத்து நிறைந்த பழவகைகளில் நேந்திரம் பழமும் ஒன்று. அந்த வகையில் சுவையான பால் புட்டு, பழம் பூரி எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பால் புட்டு :
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு-1கப்
கேரட் துருவல் -1/2 கப்
தேங்காய் பால் -2 கப்
துருவிய தேங்காய்-1 கப்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிது சிறிதாக தேங்காய் பாலை சேர்த்து கலந்து எடுத்து கொள்ளவும். இந்தக் கலவையை சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊற வைத்த மாவு நன்கு உலர்ந்தவுடன் அதனை புட்டு மாவு பதத்திற்கு நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் வாணலியை வைத்து சிறிதளவு நெய்விட்டு துருவிய கேரட் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும். இதனை புட்டு மாவுடன் சேர்த்து நன்கு கலந்து எடுத்து கொள்ளவும். ஒரு புட்டு பாத்திரத்தை எடுத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் புட்டு மாவு , 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் என்ற வீதத்தில் போட்டு நன்கு வேக வைத்து எடுத்தால் சுவையான பால் புட்டு ரெடி!
பழம் பூரி :
தேவையான பொருட்கள் :
நன்கு பழுத்த நேந்திரம் பழம் -1
மைதா -1/2கப்
அரிசி மாவு- 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்-1/4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் -சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா அரிசி மாவு, சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்.
நன்கு பழுத்த நேந்திரம் பழத்தை மெலிதாக சீவி எடுத்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன் சீவி வைத்த வாழைப்பழத்தை கலந்து வைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பழம் பூரி ரெடி!
மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க இந்த அட்டகாசமான சிற்றுண்டி மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை ட்ரை பண்ணி பாருங்க .