ராமம் ராகவம் வி ம ர் ச ன ம்

1 day ago
ARTICLE AD BOX

நேர்மையான அரசு அதிகாரி சமுத்திரக்கனி, பிரமோதினி தம்பதியின் மகன் தன்ராஜ் கொரனானி படிப்பில் ஜீரோ. குடி, சூதாட்டம், ஊர் சுற்றுதல் என்று கெட்டப் பழக்கங்களுடன் ஏமாற்றும் மகன் மீது பேரன்பு கொண்ட சமுத்திரக்கனி, அவன் என்றாவது ஒருநாள் திருந்துவான் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார். பணத்துக்காக தனது தந்ைதயையே லாரி ஏற்றிக் கொல்ல முடிவு செய்யும் தன்ராஜ் கொரனானி, அதற்காக ஹரீஷ் உத்தமனிடம் பேரம் பேசுகிறார்.

இதையறிந்த சமுத்திரக்கனி, தன்ராஜ் ெகாரனானியை என்ன செய்கிறார் என்பது மீதி கதை.தனது மகனைக் கண்டிப்பது, அன்பு செலுத்துவது, திருந்திவிடுவான் என்று நம்புவது என்று, மாறுபட்ட ஒரு அப்பா கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி அட்டகாசமாக நடித்து, ரசிகர்களின் கண்களை குளமாக்குகிறார். பொறுப்பின்றி திரியும் மகனாக தன்ராஜ் கொரனானி, தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். அப்பாவையே கொல்ல நினைக்கின்ற அவர் மீது அதீத எரிச்சல் ஏற்படுவதே அந்த கேரக்டருக்கான வெற்றி.

ஹீரோயின் மோக்‌ஷாவுக்கு அதிக வேலையில்லை. சமுத்திரக்கனி மனைவி பிரமோதினி, வில்லன்கள் சுனில், ஹரீஷ் உத்தமன் மற்றும் சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிருத்விராஜ் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.அருண் சிலுவேரு இசையில் யுகபாரதி, முருகன் மந்திரம் எழுதிய பாடல்கள் கதைக்கேற்ப பயணித்துள்ளன. பின்னணி இசை அழுத்தமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் துர்கா கொல்லிபிரசாத், காட்சிகளை இயல்பாகப் பதிவு செய்துள்ளார். திரைக்கதை எழுதி தன்ராஜ் கொரனானி இயக்கியுள்ளார். கதையில் அவரது கேரக்டர் எடுக்கும் குழப்பமான முடிவு பார்வையாளர்களை சற்று தடுமாற வைக்கிறது. இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

Read Entire Article