ராபின்ஹூட் படத்தில் கேமியோவில் அசத்தியிருக்கும் பக்கா ஸ்டைலிஷ் பிளேயர் டேவிட் வார்னர்!

3 hours ago
ARTICLE AD BOX

David Warner Cameo in RobinHood Movie : முன்னாள் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் மார்ச் 25ஆம் தேதி வெளியாகவுள்ள 'ராபின்ஹுட்' தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமாகவுள்ளார். வார்னர், டி20 உலகக் கோப்பை 2024க்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றில் குரூப் 1-ல் மூன்றாம் இடம் பிடித்து வெளியேறியது. கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அதிரடியான தொடக்க ஆட்டக்காரர்களில் இவரும் ஒருவர். 38 வயதான இவர் இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தும், ஐபிஎல் 2025 ஏலத்தில் எந்த அணியும் அவரை எடுக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, டேவிட் வார்னர் வர்ணனையாளராகப் பணியாற்றினார். பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான வர்ணனையாளர் குழுவில் அவர் ஒருவராக இருந்தார். இப்போது, மூத்த ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் வரவிருக்கும் தெலுங்கு திரைப்படமான 'ராபின்ஹூட்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். வார்னர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் தனது கேமியோ போஸ்டரை பகிர்ந்துள்ளார். 

'ராபின்ஹூட்' திரைப்படத்தில் தனது கேமியோ போஸ்டருடன், டேவிட் வார்னர், “இந்திய சினிமா, இதோ நான் வருகிறேன். #Robinhood திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. இந்த படப்பிடிப்பை மிகவும் ரசித்தேன். மார்ச் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியீடுஎன்று எழுதியிருந்தார். 

'ராபின்ஹூட்' போஸ்டரில் டேவிட் வார்னரின் கேமியோ 

Indian Cinema, here I come 😎

Excited to be a part of #Robinhood. Thoroughly enjoyed shooting for this one.

GRAND RELEASE WORLDWIDE ON MARCH 28th.@actor_nithiin @sreeleela14 @VenkyKudumula @gvprakash @MythriOfficial @SonyMusicSouth pic.twitter.com/eLFY8g0Trs

— David Warner (@davidwarner31) March 15, 2025

டேவிட் வார்னர் தனது முதல் இந்திய திரைப்படத்தில் நடித்தது சமூக ஊடகங்களில் வைரலாகியது. கிரிக்கெட் மைதானத்தில் அதிரடியான இன்னிங்ஸ்களை ஆடியது போல், நடிப்பிலும் அசத்துவார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் வார்னரை டோலிவுட்டுக்கு வரவேற்றனர், மேலும் சிலர் இந்திய சினிமாவை அவர் தழுவுவதற்கு பாராட்டு தெரிவித்தனர்.

டேவிட் வார்னரின் சினிமா வருகைக்கு நெட்டிசன்கள் எப்படி பிரதிபலித்தனர் 

Welcome Boss 🫂❤️ https://t.co/bDJOhcI6Ti

— Inamul Hasan (@InamulH37900667) March 15, 2025

Not in IPL… no problem. You can catch @davidwarner31 at your nearest cinema hall starting 28th March https://t.co/j6MRLb56s6

— HowzatBro (@HowzatBro) March 15, 2025

Block buster Welcome #DavidWarner Bhai
From Youth Star #Nithiin Fans #Robinhood #RobinhoodOnMar28th 🔥💥 https://t.co/7FOLa7puzC

— #RobinHood (@KJanakiramNaidu) March 15, 2025

David bhAAi 🧡🔥 https://t.co/HdtSHFyD2q

— Run king (@subbunique) March 15, 2025

In my honest opinion, he is already a better actor than those undeserving nepo Bollywood kids. https://t.co/hvMrVHhEQH

— Tanishk ᡣ𐭩 (@utd4lifemate3) March 15, 2025

Welcome to Indian cinema Bhaii ❤️ Wishing you a very good luck for your New Beginnings 🖤🖤 https://t.co/cw9dlYVmac

— K🅰️rn🅰️ (@Karnaa96) March 15, 2025

DAVID BHAIII!!!! 🔥🔥💥💥 https://t.co/pZ0G8cHcgH

— Elshiiiii (@ElshiKeren) March 15, 2025

@davidwarner31 welcome to Indian Movies!! https://t.co/Eta7c8tVDt

— Sumit_Kumar (@Me_Sumit_Kumar) March 15, 2025

David Warner in Tollywood who would have thought 🤔! https://t.co/sdobvhId8e

— Sriku P (@SrikuP93) March 15, 2025

Davey and Hyderabad. What a story 🧡 https://t.co/EgFcdSWg7b

— The Divine Beard (@Gerrardicted) March 15, 2025

டேவிட் வார்னருக்கு இந்திய சினிமா மீது நீண்டகாலமாக ஒரு காதல் உண்டு, குறிப்பாக தெலுங்கு திரைப்படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் பிரபலமான டோலிவுட் நடன அசைவுகள் மற்றும் வசனங்களை எல்லாம் செய்து அசத்துவார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஐபிஎல் விளையாடிய போது தெலுங்கு சினிமா மீது அவருக்கு காதல் அதிகமானது. வார்னர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகர், அவர் தனது சாதனைகளை கொண்டாடும் வகையில் அடிக்கடி 'புஷ்பா' ஸ்டைலை செய்து அசத்துவார். 

டேவிட் வார்னர் தெலுங்கு படங்களில் நடிக்க ஆசைப்பட்டார், அது இப்போது நிதின் நடிக்கும் 'ராபின்ஹூட்' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பின் மூலம் நிறைவேறியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாதது போன்றவற்றிற்கு பிறகு, வார்னர் கிரிக்கெட்டைத் தவிர வர்ணனை மற்றும் நடிப்பு போன்ற புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார், இதன் மூலம் தனது இந்திய ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க முடியும் என நம்புகிறார்.

 

Read Entire Article