ARTICLE AD BOX
நடிகைகளின் இடுப்பைக் கிள்ளி விளையாடியவர் நடிகர் விஜய் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை காட்டமாகக் கூறினார்.
சென்னையில் காலை போராட்டத்தில் கைதுசெய்யப்பட்ட அவர் மாலையில் விடுவிக்கப்பட்ட பின்னர், ஊடகத்தினரிடம் பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னதாக, த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் பா.ஜ.க.வின் போராட்டம் நாடகம் என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார்.
“ஒன்றியம் மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு, புறவாசல் வழியாக மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதே தெரிகின்றது. இதை அம்பலப்படுத்தி ஏற்கெனவே எங்கள் கழகத் தலைவர் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர். இது, இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் கைது நாடகத்தின் வாயிலாக வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.” என்று ஆனந்த் கூறியிருந்தார்.
அதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ நடிகைகளின் இடுப்பைக் கிள்ளி அரசியல் செய்தவர் விஜய். ஒர்க் பிரம் ஹோம் அரசியல் செய்யும் அவருக்கு மக்கள் பிரச்னையைப் பற்றி என்ன தெரியும்? திரைப்படத்தில் குடித்துவிட்டு, புகை பிடித்துவிட்டு டாஸ்மாக் பற்றி பேச விஜய்க்கு என்ன உரிமை உள்ளது? எனக்கும் பேசத் தெரியும். த.வெ.க. வரம்பை மீறிப் பேசக்கூடாது. குஸ்ஸி ஆனந்து புஸ்ஸி ஆனந்துனு அறிக்கை விடக்கூடாது. தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட பி டீம்தான் விஜய்.” என்று அண்ணாமலை கூறினார்.