ARTICLE AD BOX
உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (மார்ச் 18) தமிழகத்தில் சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
செங்குன்றம்: தர்காஸ் சாலை, ஸ்ரீ பால விநாயகர் நகர், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சென்றம்பாக்கம், சிரங்கவூர், புது நகர் மூன்றாவது தெரு மற்றும் ஐந்தாவது தெரு. மல்லிம நகர்.
மின்சார வாரியம்
மின்சார வாரியம் அறிவுறுத்தல்
இதற்கிடையே, கோடை காலத்தில் மின் தடை ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாடு மின்சார வாரியம் பல முக்கிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.
இந்த ஏற்பாடுகளுக்கு மத்தியில், மாணவர்களுக்கான வருடாந்திர இறுதித் தேர்வுகள் தொடங்கியுள்ளன.
இதையொட்டி, தமிழ்நாடு மின்சார விநியோகக் கழகம் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையின்படி, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களுக்கு தடையில்லா தேர்வு சூழலை உறுதி செய்வதற்காக, அனைத்து தேர்வு மையங்களிலும் தினமும் காலை 7 மணி முதல் மாலை 5:30 மணி வரை தடையில்லா மூன்று கட்ட மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது.