ARTICLE AD BOX
சென்னை: ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ கதை, திரைக்கதை எழுதி, கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் சிவராமன் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தங்கை இஸ்ரத் காதரி இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை தான் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’. வீர அன்பரசு ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா நடிக்கின்றனர்.