ARTICLE AD BOX
ராணிபுரம் மலைவாசஸ்தலம் காத்தர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான இடமாகும் ஒரு காலத்தில் மடத்துமலை என்று அழைக்கப்பட்டது. கேரளாவின் ஊட்டி என்று அழைக்கப்படும் ராணிபுரம் மலைகள் குளிர்ந்த காலநிலை ஆழமான காடுகள் மற்றும் வசீகரிக்கும் மலையேற்றம் புகழ் பெற்றது. செழிப்பான புல்வெளிகள் அடர்ந்த பசுமையான காடுகள் மற்றும் குளிர்ந்த காற்று ஆகியவை இராணிபுரம் மலையை சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமுள்ள இடமாக மாற்றுகிறது.
மலைகளால் சூழப்பட்ட இந்த ராணிபுர கிராமம் கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் உள்ளது இது டிரெக்கிங் செல்வதற்கு பெஸ்ட் ஸ்பாட் ஆகும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு தாயகமாக ராணிபுரம் திகழ்கிறது காடுகள் காட்டு பூக்கள் பரந்த புல்வெளிகள் சூழ்ந்துள்ள ராணிபுரத்தை அழகிய ராட்சஷியாக இயற்கை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
சுற்றுலா வாசிகளை ஈர்க்கும் வகையில் வனவிலங்கு சரணாலயமும் உள்ளது அவை கேரளாவில் வனவிலங்குகளை அதன் இருப்பிடத்திலேயே பார்க்கும் வாய்ப்பை தருகிறது.
கேரளாவின் பழமையான கோட்டைகளில் ஒன்றான பீகல் கோட்டையையும் இந்தப் பகுதியில் மாலை நேரத்தில் செல்கையில் அரபிக் கடலின் சூரிய அஸ்தமனத்தில் அழகிய காட்சியைகண்டு ரசிக்கலாம்.
காவேரி நதியின் ஆரம்ப மையமாக கருதப்படும் தலைக்காவேரி கோவிலும் மலையின் பள்ளத்தாக்கில் தான் அமைந்துள்ளது.
தனித்துவமான பசுமையான ஷோலா காடுகள் மற்றும் அழகிய புல்வெளிகள் பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும் யானை வழித்தடம் இப்பகுதியில் மற்றொரு கண்கவர் இடமாகும் யானைகள் கூட்டம் தங்கள் இயற்கையான வாழ்விடங்களில் சுற்றி திரிவதை பார்த்து மகிழலாம்.
அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு போக வேண்டிய ஐந்து மலை பிரதேசங்கள் என்னென்ன பார்ப்போமா?
பன்றிமலை
திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மலை இருக்கிறது நீர்வீழ்ச்சிகள் நீரோடைகள் பசுமையான சூழ்நிலை என இந்த இடம் பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும் ஒருநாள் பயணத்திற்கு ஏற்ற இடம்தான் பன்றிமலை.
மஞ்சு மலை
கிருஷ்ணகிரி மாவட்டம் அன் செட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மஞ்சுமலை இருக்கிறது. ட்ரக்கிங் கேம்பிங் செய்வதற்கு இது ஏற்ற இடம் ஆகும். குளிர்ச்சியான வானிலையும் நமக்கு புத்துணர்வை கொடுக்கும்.
சிறுமலை
திண்டுக்கலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து 1600 மீட்டர் உயரத்தில் இந்த மலை இருக்கிறது. இங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி பழமையான சிவாலயம் வெள்ளிமலை முருகன் கோவில் வேளாங்கண்ணி தேவாலயம் என பல இடங்கள் பார்ப்பதற்கு ஏற்றது.
கொல்லிமலை
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலை மௌண்டைன் ஆஃப் டெத்என்று அழைக்கப்படுகிறது மலைத் தொடர்கள் நீர்வீழ்ச்சி என இயற்கை மணம் மாறாமல் பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கிறது
கொழுக்குமலை
உலகிலேயே உயரமான இடத்தில் தேயிலை விளையும் பகுதி இது. தேனி மாவட்டத்தில் இருக்கும் இந்த மலை மூணாரின் இதயம் என்றும் சொல்லப்படுகிறது கேரளாவில் சூரியநெல்லி வழியாக இந்த பகுதிக்கு செல்லவேண்டும் இந்த மலையில் சூரிய உதயத்தை காண்பது அவ்வளவு அற்புதமான இருக்கும் அதேபோல் அங்கு கிடைக்கும் டீயும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.