ARTICLE AD BOX
மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தமிழ்நாடு 9.36 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான சாதனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. அதிலிருந்து சற்று குறைந்திருந்தாலும் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 39% ஆக உள்ளது.
2024-25 நிதியாண்டில் ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் இருந்து 26.12 பில்லியன் டாலர் மதிப்பிலான எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. கர்நாடகா (4.95 பில்லியன் டாலர்), உத்தரப் பிரதேசம் (3.78 பில்லியன் டாலர்), மகாராஷ்டிரா (2.72 பில்லியன் டாலர்) தமிழ்நாட்டுக்கு அடுத்த இடங்களில் உள்ளன.
கடந்த டிசம்பரில், தமிழ்நாட்டின் மின்னணு சாதன ஏற்றுமதி சிறிது சரிவு கண்டது. 2024 நவம்பர் இல் 1.534 பில்லியன் டாலர் ஏற்றமதி செய்திருந்த நிலையில் 2024 டிசம்பரில் 1.524 பில்லியன் டாலராக லேசாகக் குறைந்துள்ளது. இருந்தாலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை முந்தி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
2023-24 நிதியாண்டிலும் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக் சாதனங்களை ஏற்றுமதி செய்த தமிழ்நாடு ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 32.84% பங்களிப்பைச் செய்து முதல் இடத்தைப் பெற்றது. அதுவும் 2 வருடங்களுக்கு முன் 1.86 பில்லியனாக இருந்த ஏற்றுமதி மதிப்பு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.