ராகியில செய்யலாம் அசத்தலான கார ரவாதோசையும் - ஸ்வீட் அப்பமும்..!

2 hours ago
ARTICLE AD BOX

ற்போது சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பெருகி வருவதுடன் அதில் செய்யப்படும் உணவுகளையும் தேடித்தேடி மக்கள் விரும்பி உண்கிறார்கள். ஆதிகாலத்திலிருந்து நம்மிடையே புழங்கும் தானியமான ராகியில் கால்ஷியம் உள்ளிட்ட அநேக சத்துக்கள் இருப்பதை அறிவோம்.

ராகியில் களி, புட்டு இவைகள் மட்டுமல்ல கொஞ்சம் யோசித்து வித்தியாசமாக ராகியை கலந்து செய்து தந்தால் சிறு பிள்ளைகளும் பிடிவாதம் செய்யாமல் அதை ருசிப்பார்கள் இதோ அவர்களுக்காக ராகியில் ரவா தோசையும்,  அப்பமும்.

ராகி ரவா தோசை 

தேவையானவை:
ராகி மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
வறுத்த ரவை - 1/2 கப்
புளித்த தயிர்-  1 கப்
கேரட் - 1
மிளகு சீரகம் தலா-  1 டீஸ்பூன்
இஞ்சி - 2 அங்குலம்
பச்சைமிளகாய்- 2
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய்-  தேவைக்கு

செய்முறை:
ராகி மாவுடன் ரவை, கோதுமை மாவு, அரிசி மாவு, இரண்டிரண்டாக உடைத்த மிளகு சீரகம், புளித்த தயிர், துருவிய கேரட், இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கட்டிகளின்றி கெட்டியாக இல்லாமல் தளர கரைக்க வேண்டும். கொத்தமல்லித்தழையை பொடி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

தோசை கல்லை சூடாக்கி எண்ணெயை சுற்றி ஊற்றி ரவா தோசை போல் சுற்றிலும் சுழற்றி விட்டு ஊற்றி இரு பக்கமும் முறுகலாக வேகவிட்டு எடுத்தால் ராகி ரவா தோசை தயார். இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டி தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி சூப்பராக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வெரி ஈஸி வெரி டேஸ்ட்டி... வெஜ் காரபோளி!
Amazing spicy ravadosai and sweet appam..!

ஸ்வீட் ராகி அப்பம்

தேவை:
ராகி மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
கனிந்த வாழைப்பழம் - 2
தேங்காய் துருவல் - 1/4 கப்
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் - 10
பால் - தேவைக்கு
நெய் அல்லது எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

வெல்லத்தை சிறிது நேரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ராகி மாவு கோதுமை மாவுடன் நசுக்கிய வாழைப்பழத்துண்டுகள் வெள்ளக் கரைசல் சேர்த்து நன்றாக அடிக்கவும். தேவை எனில் மிக்ஸிலிட்டும் அரைத்துக் கொள்ளலாம். தேவைக்கேற்ப  சிறிது கெட்டிப்பால் அல்லது தண்ணீர் சேர்க்கலாம்.  மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கவேண்டும். இதில் தேங்காய் துருவல் மற்றும் பொடித்த ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை சூடாக்கி நெய் அல்லது  எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து  மாவை சிறுசிறு அப்பங்களாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கலாம். அதிக நெய் வேண்டாம் என்று நினைத்தால் இதையே பணியார குழியிலும் சிறிது நெய்யூற்றி மிதமான தீயில் வைத்து வேகவைத்து எடுக்கலாம். இதில் வாழைப்பழம் மற்றும் கெட்டி பால் சேர்த்திருப்பதால் விரைவில் சிவந்துவிடும் என்பதால் கவனம் தேவை. இந்த அப்பம் பிள்ளைகள் விரும்பும் இனிப்பு சுவையுடன் சத்துக்களும் நிறைந்ததாக இருக்கும்.

Read Entire Article