ARTICLE AD BOX
இங்கிலாந்து ஒயிட் பால் அணியின் அடுத்த கேப்டன் யார்? பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிசீலனை
செய்தி முன்னோட்டம்
ஜோஸ் பட்லரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஒயிட் பால் அணியின் கேப்டன் பதவியை ஏற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வலுவான வேட்பாளராக உருவெடுத்து வருகிறார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து கடும் தோல்விகளைச் சந்தித்ததை அடுத்து ஜோஸ் பட்லர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டன் பதவியை ராஜினா செய்தார்.
இங்கிலாந்து அணி கடந்த 11 ஒயிட் பால் போட்டிகளில் 10 இல் தோல்வியடைந்து மோசமான தோல்விக்குப் பிறகு பட்லர் ராஜினாமா செய்தார்.
ஆரம்பத்தில், துணை கேப்டன் ஹாரி புரூக் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
பென் ஸ்டோக்ஸ்
பென் ஸ்டோக்ஸை தேர்வு செய்வதற்கு கூறப்படும் காரணம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸின் சிறந்த தலைமைத்துவ திறன்களைக் காரணம் காட்டி, பென் ஸ்டோக்ஸ் சரியான தேர்வாக இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குனர் ராப் கீ சுட்டிக் காட்டியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பென் ஸ்டோக்ஸ் கடைசியாக 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் போது ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாடினார்.
அந்த தொடரில் இங்கிலாந்து அணி சிரமப்பட்ட போதிலும், அவர் சிறப்பாக செயல்பட்டார். 50.66 சராசரியில் 304 ரன்கள் எடுத்தார்.
இருப்பினும், தொடை எலும்பு காயம் காரணமாக அவர் 18 மாதங்களாக ஒயிட் பால் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்கிறார்.