உ.பி. | ”என் மனைவி ஒரு..” அடிக்கடி பணிக்கு தாமதமாக வந்த காவலர்.. நோட்டீஸ்-க்கு கொடுத்த விநோத பதில்!

3 hours ago
ARTICLE AD BOX
Published on: 
06 Mar 2025, 3:08 pm

உத்தரப் பிரதேசத்தில் பணிக்குத் தாமதமாக வருவது தொடர்பான நோட்டீஸுக்கு, காவலர் அளித்த விளக்கக் கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.

uttarpradesh cops bizarre response for coming late to work
up policex page

மீரட்டில் மாகாண ஆயுதக் காவல்படையைச் சேர்ந்த காவலர் காலைப் பணிக்கு தாமதமாக வந்துள்ளர்’, பணி விதிமுறைகளின்படி முகச் சவரம் செய்துகொள்ளாமல் இருந்துள்ளார்; காவல்படையின் நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்கத் தவறியுள்ளார்; இவற்றுக்கு விளக்கம் கேட்டு உயரதிகாரி மதுசூதன் சர்மா நோட்டீஸ் அளித்துள்ளார்.

அதற்கு, காவலர் அளித்துள்ள விளக்கத்தில் தனது மனைவி ஒரு பேய் என்றும் அவரால் தனக்கு கொடுங்கனவுகள் வருவதாகவும் கூறியுள்ளார். மனைவியுடனான பிரச்சினைகளால் இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை என்றும் கூறியுள்ளார். வாழ்வதில் நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறியுள்ள காவலர், ஆன்மீக ரீதியான முக்திக்கு வழிகாட்ட வேண்டும் என்று தனது உயரதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். காவலரின் விளக்கம் உண்மையா என்று கண்டறிவதற்கும், இந்தக் கடிதம் சமூக வலைத்தளங்களில் கசிந்தது குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

uttarpradesh cops bizarre response for coming late to work
உத்தரப்பிரதேசம் | கும்பமேளாவில் மீண்டும் வாகன நெரிசல்!
Read Entire Article