ARTICLE AD BOX

image courtesy: X(Twitter) / File Image
நாக்பூர்,
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இந்த தொடரின் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, மும்பை, விதர்பா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் கடந்த 17ம் தேதி தொடங்கின. இதில் நாக்பூரில் நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை அணி, விதர்பாவை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா தனது முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்தது. விதர்பா தரப்பில் டேனிஷ் மேலவார் 79 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய மும்பை அணி 270 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் ஆகாஷ் ஆனந்த் 106 ரன்கள் எடுத்தார்.
விதர்பா தரப்பில் பார்த் ரெகாடே 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 113 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா 292 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. விதர்பா தரப்பில் யாஷ் ரத்தோட் 151 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து மும்பை அணிக்கு 406 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி தனது 2வது இன்னிங்சில் 325 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் விதர்பா அணி 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 66 ரன் எடுத்தார். விதர்பா தரப்பில் ஹார்ஷ் துபே 5 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் விதர்பா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.�