ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது . 8 அணியில் அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது. விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரும் அவரோடு இணைந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் கடந்து கோலி புதிய சாதனை படைத்தார். 257 வின்னிங்சில் ஒரு சாதனையை கோலி அடைந்துள்ளார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார் . ஒருநாள் கிரிக்கெட்டில் இது கோலியின் 51 வது சதம் ஆகும். இந்த நிலையில் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து முறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் கோலி என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஐசிசி தொடர்களில் ஒரு அணிக்கு எதிராக வேறு எந்த வீரர்கள் மூன்று ஆட்டநாயகன் விருதை வெல்லாத நிலையில் பிரத்தியேகமாக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.