ARTICLE AD BOX
அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியின் 3ம் நாளில் குஜராத் அணி 222 ரன் குவித்தது. ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் கேரளா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 457 ரன் குவித்தது. அந்த அணியின் முகம்மது அசாருதீன் கடைசி வரை அவுட்டாகாமல் 177 ரன் விளாசினார். அதையடுத்து குஜராத் 3ம் நாளில் முதல் இன்னிங்சை துவக்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரியங்க் பஞ்சல், ஆர்யா தேசாய் அமர்க்களமாக ஆடி பொறுப்புடன் ரன்களை சேர்த்தனர்.
ஆர்யா 73 ரன்னில் அவுட்டானார். பின் வந்த மனன் ஹிங்ரஜியாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 222 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. பிரியங்க் 117 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். கேரளாவும் சிறப்பான ஸ்கோரை எடுத்துள்ளதால் இந்த போட்டி டிராவில் முடியும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. இன்று 4ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
The post ரஞ்சி கோப்பை அரையிறுதி சபாஷ் சரியான போட்டி குஜராத் அணி பதிலடி: டிராவை நோக்கி நகர்கிறது appeared first on Dinakaran.