உலக மகளிர் டென்னிஸ் தரவரிசை டாப் 10க்குள் நுழைந்த மிர்ரா ஆண்ட்ரீவா

3 hours ago
ARTICLE AD BOX

துபாய்: துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ரஷ்ய இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா (17) முதல் முறையாக உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 10 இடங்களுக்குள் முன்னேறி சாதனை படைத்துள்ளார். துபாய் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி முடிவடைந்த நிலையில் டபிள்யூடிஏ உலக டென்னிஸ் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது. அதில் முதல் 3 இடங்களில் இருக்கும் அரைனா சபலென்கா (பெலாரஸ்), இகா ஸ்வியடெக் (போலந்து), கோகோ காஃப் (அமெரிக்கா) துபாய் ஓபனில் காலிறுதி, அரையிறுதியுடன் வெளியேறியபோதும் அதே இடங்களில் தொடர்கின்றனர்.

இப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்த ஜாஸ்மின் பாலினி, 2 இடங்கள் பின்தங்கி 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதனால் அமெரிக்க வீராங்கனைகள் ஜெசிகா பெகுலா, மேடிசன் கீஸ் ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேறி முறையே 4, 5வது இடங்களை பிடித்துள்ளனர். 7ம் இடத்தில் கஜகஸ்தானின் எலினா ரைபாகினா, 8ம் இடத்தில் சீனாவின் கின்வென் ஸெங் உள்ளனர். துபாய் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா முதல் முறையாக 10 இடங்களுக்குள் முன்னேறி 9ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதற்கு முன் அதிகபட்சமாக 14வது இடத்தை அவர் பிடித்துள்ளார். தரவரிசைப் பட்டியலில் முதல் 102 இடங்களில் உள்ள வீராங்கனைகளில் மிர்ரா மட்டுமே 20 வயதுக்கு உட்பட்டவர். 10ம் இடத்தில் அமெரிக்காவின் எம்மா நவரோ இடம் பெற்றுள்ளார்.

The post உலக மகளிர் டென்னிஸ் தரவரிசை டாப் 10க்குள் நுழைந்த மிர்ரா ஆண்ட்ரீவா appeared first on Dinakaran.

Read Entire Article