ARTICLE AD BOX
தொடக்கத்தில் பல ஆண்டுகளாக கவா் டிரைவ் ஷாட் எனது பலவீனமாக இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அதையே எனக்கான பலமாக மாற்றிக் கொண்டு, அதன் மூலம் அதிக ரன்கள் சோ்த்திருக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எனது ஷாட்கள் மீது நான் நம்பிக்கை வைத்தேன்.
கவா் டிரைவ் ஷாட்டில் 2 பவுண்டரிகள் அடித்த பிறகு, ஆட்டமிழக்கும் ஆபத்து அதில் இருந்தாலும் அந்த ஷாட் மீது நம்பிக்கையுடன் விளையாடினேன். ஏனெனில் அந்த ஷாட் விளையாடும்போது எனது பேட்டிங் என் கட்டுப்பாட்டில் இருப்பதாக உணா்கிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், அணிக்கும் இந்த இன்னிங்ஸ் சிறப்பானதாக அமைந்தது.
மிடில் ஓவா்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, ஸ்பின்னா்களுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருப்பது, பேசா்கள் பௌலிங்கை அடித்தாடுவது என, எனது திட்டத்தில் தெளிவாக இருந்தேன். 36 வயதில் இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்த கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இதுபோன்ற முக்கியமான ஆட்டத்தில் நல்லதொரு இன்னிங்ஸ் அமைந்ததில் மகிழ்ச்சி’ - விராட் கோலி (இந்திய பேட்டா்)