ARTICLE AD BOX

image courtesy:ICC
லண்டன்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இதில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இதனையடுத்து அரையிறுதிக்கு முன்னேற அடுத்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் ஆப்கானிஸ்தானுடன் நாளை மோதுகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியின் எஞ்சிய தொடரிலிருந்து காயம் காரணமாக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பிரைடன் கார்ஸ் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக ரெஹான் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.�