இந்த ஆண்டு கப் சிஎஸ்கே-விற்கு தான்! காயத்திலிருந்து மீண்டு வந்த முக்கிய வீரர்!

3 hours ago
ARTICLE AD BOX

தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு மெகா நடைபெற்றுள்ளதால் ஒவ்வொரு அணிலும் பல புதிய முகங்கள் இடம் பெற்றுள்ளனர். இதனால் எந்த அணி பலமாக இருக்கும் என்பது தெரியவில்லை. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற அணிகள் மீண்டும் கோப்பையை அடிக்க தயாராகி வருகின்றனர். மறுபுறம் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி, டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் கோப்பையை வெல்ல அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2025ல் சென்னை அணியில் விளையாடப்போகும் 2 மும்பை வீரர்கள்! யார் தெரியுமா?

சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதியில் இந்தியா!

நேற்று ராவல்பிண்டியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நியூசிலாந்து அணி பங்களாதேஷை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் குரூப் ஏ-வில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணியும்,  பங்களாதேஷ் அணியும் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் அரை இறுதி வாய்ப்பை இழந்துள்ளனர். கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஐசிசி தொடரை பாகிஸ்தான் நடத்தி இருந்தாலும் முதல் சுற்றிலேயே வெளியேறி உள்ளது. இன்னும் குரூப் B-யில் யார் யார் அரை இறுதி போட்டிக்கு வருவார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.

ரச்சின் ரவீந்திரா அசத்தல்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியின் வீரர் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். 105 பந்துகளில் 12 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர்கள் உட்பட 112 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் ரச்சின் ரவீந்திராவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற போது அது அவரது கையை தாண்டி நெற்றியில் வேகமாகப்பட்டது. இதனால் ரத்தம் சொட்ட சொட்ட மைதானத்தை விட்டு வெளியேறினார். மேலும் அதன் பிறகு நடைபெற்ற போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

New Zealand and India grab their semi-final berth at the #ChampionsTrophy after Rachin Ravindra & Michael Bracewell starred in #BANvNZ

More  https://t.co/0USw2Fengv pic.twitter.com/YAhSjahuSV

— ICC (@ICC) February 24, 2025

இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று விளையாடினார். 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இந்த கட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தியுள்ளார். மேலும் நியூசிலாந்து அணிக்காக ஐசிசி தொடர்களில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார் ரச்சின். அவர் 2023 ஒருநாள் தொடரில் தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பலம்

கடந்த ஆண்டு முதல் ரச்சின் ரவீந்திரா சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஆரம்பத்தில் நல்ல தொடக்கம் கொடுத்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் ரன்கள் அடிக்க சிரமப்பட்டார். சரியான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கிடைக்காததால் சென்னை அணி கடந்தாண்டு தோல்வி அடைந்தது. இந்நிலையில் காயம் காரணமாக இந்த ஆண்டு ரச்சின் விளையாடுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான அவருடைய சதம் அவரின் பார்ம் பற்றிய சந்தேகங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இதே போல அவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடினால் சென்னை அணிக்கு நிச்சயம் கோப்பை உறுதி என்று சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட ஹர்திக் பாண்டியாவிற்கு தடை! காரணம் இது தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article