ARTICLE AD BOX
நடிகர் ரஜினிகாந்த் முன்னணி இயக்குநர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன.
இப்படத்திற்குப் பின் ரஜினி இயக்குநர் நெல்சன் இயக்கிவரும் ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: சிக்கந்தர் படத்துக்கு 2 கிளைமாக்ஸ்..! ஏ.ஆர்.முருகதாஸின் நீண்ட பேட்டி!
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், நெல்சன் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கூலி மற்றும் ஜெயிலர் ஆகிய இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.