ARTICLE AD BOX
ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு கூடுதல் கட்டணம்.. சென்னை தியேட்டருக்கு 75 மடங்கு அபராதம்!
சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திற்கு, கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலித்த தியேட்டருக்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு ரூ.12 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. மேலும் வழக்கு செலவுகள் மற்றும் 9 சதவீத ஆண்டு வட்டியுடன் இந்த தொகையை நுகர்வொருக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் அண்ணாத்த. ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன் தாரா நடித்து இருந்தார். இது போக தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். மேலும் 90ஸ்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் குஷ்பு மற்றும் மீனாவும் நடித்து இருந்தனர்.

பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து இருந்ததால், ரஜினியின் நடிப்பு அவரது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இதனால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
ஒரு சில இடங்களில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் தான் சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் டிக்கெட் கட்டணம் தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் அவருக்கு இழப்பீடும் அளிக்க சென்னை நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி, 2024-ல் அண்ணாத்த படம் பார்ப்பதற்காக டிக்கெட் நியூ இணையதளம் வாயிலாக டிக்கெட் புக் செய்துள்ளார். கேசினா தியேட்டரில் படம் பார்க்க இவர் டிக்கெட் புக் செய்து இருந்த நிலையில், அரசு நிர்ணையித்த கட்டணத்தை மீறி ரூ.159.50 கட்டணமாக வசூலித்துள்ளது. இதையடுத்து சென்னை வடக்கு மண்டல நுகர்வொர் குறை தீர்ப்பு ஆணையத்தில், தியேட்டரில் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்ப்படுவது குறித்து முறைப்படி புகாரளித்தார்.
இந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பரில் நுகர்வொர் ஆணையத்தின் தலைவர் ராஜேஸ்வரி விசாரித்தார். விசாரணை முடிவில் அதிரடி உத்தரவினை பிறபித்து இருக்கிறார். இதன்படி, அதிக கட்டணம் வசூலித்து தியேட்டர் நிர்வாகம் நுகர்வோர் விதிகளை மீறியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட தேவராஜனுக்கு தியேட்டர் நிர்வாகம் ரூ.12 ஆயிரம் இழப்பீடு அளிக்க வேண்டும்.
வழக்கு செலவுகள் மற்றும் 9 சதவீத ஆண்டு வட்டியுடன் இந்த தொகையை நுகர்வொருக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் ஆணையத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கேசினோ திரையரங்கம் சார்பில் மேல் முறையீடு செய்யப்படுமா?என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை.