ARTICLE AD BOX
சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்னு சொல்ற பாடலுக்கு ஏற்ப அப்பவும் சரி. இப்பவும் சரி. எப்பவும் கெத்தா நிக்காரு ரஜினிகாந்த். ஆனா அவர் முதல்ல திரையுலகில் நுழைவதற்கு பட்ட பாடு அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். ஆனா இப்போ வளர்ந்து பெரிய ஆளாகிவிட்டார்.
கமல், ரஜினியுடன் பல படங்களில் காமெடி ஆக்டராக நடித்துள்ளவர் ஒய்.ஜி.மகேந்திரன். அவர் ஒருமுறை ரஜினியைப் பற்றி சில விசேஷமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
நெருக்கமான நட்பு: எனக்கும், கமலுக்கும் நெருக்கமான நட்பு உண்டு. இருவரும் வாடா, போடான்னு கூட பேசிக்கொள்வோம். 16 வயசுல இருந்தே நாங்க நண்பர்கள். அவரோடு சேர்ந்து பல படங்கள்ல நடிச்சிருக்கேன். அவரோடு நடித்த காமெடி நடிகர்களில் பெஸ்;ட் பிரண்டுன்னா அது நான்தான்.
புவனா ஒரு கேள்விக்குறி: ரஜினியைப் பற்றிச் சொல்லணும்னா அவரை புவனா ஒரு கேள்விக்குறி சூட்டிங்ல தான் பார்த்தேன். ஓரத்துல அமைதியா நின்னுக்கிட்டு இருப்பார். சிவக்குமார் ஒருமுறை எங்கிட்ட அவரைப் பற்றி இப்படிச் சொன்னாரு. 'மைசூர்ல இருந்து ஒருத்தன் வந்துருக்கான்.
டிசிப்ளினே இருக்காது: யாருக்கிட்டேயும் பேச மாட்டான். அவன்கிட்ட என்னமோ இருக்கு'ன்னாரு. ரஜினி நடிப்பு கல்லூரியில் படிக்கும்போது என் அப்பாதான் புரொபசர். ரஜினியைப் பற்றி அவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. அவன்கிட்ட டிசிப்ளினே இருக்காது. கிளாசுக்கு ஒழுங்கா வரவே மாட்டான்.
ஆனா நடிச்சிக் காட்டச் சொல்லும்போது என்னமோ பண்ணி எல்லாருக்கிட்டேயும் கைதட்டல் வாங்கிடுறான். அவன்கிட்ட ஏதோ இருக்குன்னு சொல்வாரு. அந்தவகையில் சிவகுமாரும் அதையேத் தான் சொன்னாரு.
பாலசந்தர் பார்த்த பார்வை: ஒருமுறை பாலசந்தர் சீப் கெஸ்டா காலேஜ்க்கு வந்தாரு. அப்போ பாலசந்தர் ரஜினியைப் பார்த்தார். அப்போ அவருக்கிட்ட பேசினதும் ரஜினியோட திறமையை கண்டு கொண்டார். உடனே அவருக்கு அபூர்வ ராகங்கள் படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.