ARTICLE AD BOX
Pandian stores 2: சுத்தி இருக்கறவங்க சந்தோஷமா இருக்கறத பார்க்க பிடிக்கும்.. ராஜியை நெகிழ வைத்த கதிர்
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் குடும்ப உறவுகளின் மகத்துவத்தை அன்றாடம் வாழ்க்கையை வாழும் மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை மையமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படுகின்றன.
இந்த தொடரின் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த தொடரின் முதல் சீசனின் இதே கான்செப்டில் அண்ணன் -தம்பிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்த நிலையில், தற்போது அப்பா மற்றும் மகன்களுக்கிடையிலான பாசப்பிணைப்பு கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் அப்பா மற்றும் மகன்களின் பாசம் மையமாக கொள்ளப்பட்டு அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறார் இயக்குநர். இந்த சீரியலின் முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த சீரியலும் அதிகமான டிஆர்பியுடன் வலம்வந்த நிலையில் தற்போது இந்த சீரியலும் முன்னணி சீரியலாக மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியலின் 5 பேரின் அப்பாவாக ஸ்டாலின் நடித்து வருகிறார். தன்னுடைய இயல்பான நடிப்பால் சீரியலின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளார்.
ராஜியின் கனவு: இதேபோல இந்த சீரியலில் அவரது மனைவி கோமதியாக பிரபல நடிகை நிரோஷா நடித்து வருகிறார். தன்னுடைய இயல்பான நடிப்பால் இவரும் இந்த சீரியலில் கலக்கல் பர்பார்மென்சை கொடுத்து வருகிறார். இவர்கள் மட்டுமில்லாமல் இந்த சீரியலில் இவர்களின் மகன்களாக, மகள்களாக, மருமகள்களாக நடித்து வருபவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தான் பிடிக்காமல் திருமணம் செய்தாலும் ராஜியின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க நினைக்கிறார் கதிர். தன்னுடைய மனைவியை யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டுகிறார். இதனால் தான் கல்லூரியில் படித்துக் கொண்டே பார்ட் டைமில் வேலையும் செய்கிறார்.
சென்னை சென்ற கதிர் & ராஜி: இதனிடையே ராஜிக்கு போலீஸ் அதிகாரி ஆவதுதான் கனவு என்பதை தெரிந்துக் கொள்ளும் கதிர், அவருக்கு தொடர்ந்து ட்ரெயினிங் கொடுக்கிறார். இதையடுத்து அதற்கான தேர்வை மேற்கொள்வதற்காக சென்னைக்கு அவரை அழைத்து செல்கிறார். ராஜி போலீஸ் அதிகாரியாக வேண்டாம் என்று முன்னதாக பாண்டியன் மறுப்பு தெரிவித்த நிலையில் அவருக்கும் குடும்பத்தினருக்கும் தெரியாமல் ராஜியை சென்னைக்கு அழைத்துசெல்கிறார். ராஜி தயக்கம் காட்டும் நிலையில் அவருக்கு சமாளித்துக் கொள்ளலாம் என்று தைரியம் கொடுக்கிறார் கதிர். தொடர்ந்து இவர்கள் இருவரும் சென்னை வருவதாக காணப்படுகிறது.
இந்த வார பிரமோ: இதையொட்டி தற்போது வெளியாகியுள்ள இந்த வார பிரமோவில், சென்னை வரும் கதிர், ராஜிக்கு சிக்கன் பிரியாணி வாங்கிக் கொடுக்கிறார். விலை அதிகமாக இருக்கும் நிலையில் அவர் பரோட்டா வாங்கி சாப்பிடுகிறார். இதை பார்க்கும் ராஜி, தனக்காக சாப்பிடுவதில்கூட கதிர் தியாகம் செய்வதை பார்த்து கண்கலங்குவதாக இந்தஎபிசோடில் காணப்படுகிறது. தொடர்ந்து ராஜி கேட்க அவரை கடற்கரையை பார்க்க அழைத்து செல்கிறார். அங்கு ராஜி கடலில் ஆட்டம் போட, அதை அமைதியாக கதிர் பார்க்கிறார். இதையடுத்து கதிருக்கு கடல் பிடிக்காதா என்று ராஜி கேட்கிறார். தொடர்ந்து கதிருக்கு என்னதான் பிடிக்கும் என்றும் கேள்வி எழுப்புகிறார்.
கதிருக்கு பிடித்த விஷயம்: இதற்கு பதிலளிக்கும் கதிர், தன்னை சுற்றியிருப்பவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்க்க பிடிக்கும் என்று கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது. இதை கேட்டு மேலும் உணர்ச்சிவசப்படும் ராஜி, அவருடன்இணைந்து செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். தொடர்ந்து அவர்கள் சந்தோஷமாக பேசிக் கொள்கின்றனர். மீண்டும் பீச்சுக்கு வரலாம் என்று கதிர் கூற, வீட்டிலுள்ளவர்கள் சம்மதிப்பார்களா என்று ராஜி கேட்க, பார்த்துக் கொள்ளலாம் என்று வழக்கம்போல கதிர் பதிலளிப்பதாக இந்த பிரமோ மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. வீட்டிற்கு தெரியாமல் இவர்கள் சென்னை வந்துள்ள நிலையில், விஷயம் தெரிந்தவுடன் இவர்கள் அதை எப்படி சமாளிப்பார்கள் என்ற கேள்வி தற்போது ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.