விஜய்யின் தவெக நிகழ்ச்சியில், இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்பு: தொண்டர்கள் மகிழ்ச்சி..

3 hours ago
ARTICLE AD BOX
vetrimaaran attend tamilaga vettri kazhagam today function

தவெக கட்சி நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் இன்று கலந்துகொண்டார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..

தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி தொடங்கினார் நடிகர் விஜய். இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

தற்போது தவெக 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதனை தவெக தலைவர் விஜய் உள்பட அக்கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.

இன்று காலை சென்னை பனையூரில் உள்ள தன் கட்சி அலுவலகத்தில் தன்னுடைய கொள்கைத் தலைவர்களின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அழகர் கோவில் சாலையில் மாத்தூர் விளக்கில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சிறிய மாடு, பெரிய மாடு என இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெற்றது.

மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் விஜய் அன்பன் தலைமையில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

போட்டியை காண வந்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு மறைமுகமாக தன்னுடைய ஆதரவை வெற்றிமாறன் தெரிவித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். விரைவில் அவர் விஜய் கட்சியில் சேரவும் வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.

சினிமாவில் விஜய் – வெற்றிமாறன் கூட்டணிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அது கைகூடாமல் போனாலும், அரசியலில் அவர்கள் இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது என கணிக்கப்படுவதால், இது குறித்து வெற்றிமாறன் விரைவில் செய்தி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

vetrimaaran attend tamilaga vettri kazhagam organized functionvetrimaaran attend tamilaga vettri kazhagam organized function

The post விஜய்யின் தவெக நிகழ்ச்சியில், இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்பு: தொண்டர்கள் மகிழ்ச்சி.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article