ARTICLE AD BOX
இசைஞானி இளையராஜாவின் இசைக்கூடத்திற்கு நேரடியாக வந்த ரஷ்யா நாட்டின் நடனக்கலைஞர்கள் அவருக்கு மரியாதை செய்ததுடன் இசைஞானியின் பாடல்களுக்கு சிறப்பு நடனமும் ஆடியுள்ளனர்.
சென்னையில் உள்ள இளையராஜா இசைக்கூடத்திற்கு ரஷ்யா நாட்டின் நடனக்கலைஞர்கள் வந்திருந்தனர். இளையராஜா இசையமைத்த மீரா படத்தின் ஓ பட்டர்ஃப்ளை மற்றும் சிறைச்சாலை படத்தின் பூவே செம்பூவே பாடல்களுக்கு நடனமாடி இளையராஜாவின் இசையை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
இது குறித்த தகவலை நடனக் காட்சியுடன் இளையராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.