ARTICLE AD BOX
நடிகை திரிஷா ரசிகர்களுடன் இணைந்து விடாமுயற்சி படம் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை திரிஷாவின் இந்திய திரை உலகில் மிகப்பெரிய ஸ்டார் நடிகையாக வலம் வருபவர். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகி இருக்கும் இப்படம் இன்று (பிப்ரவரி 6) திரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித், திரிஷாவுடன் இணைந்து அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். உலகம் முழுவதும் வெளியாகும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றனர்.
Trisha & Regina watching #VidaaMuyarchi along with the fans🎬❤️💥pic.twitter.com/nMFrJzQtOG
— AmuthaBharathi (@CinemaWithAB) February 6, 2025
அதே சமயம் தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் மட்டும் இப்படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிடப்படலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நடிகை திரிஷா, வி ஜே ரம்யா ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து விடாமுயற்சி படத்தை காண திரையரங்கிற்கு வருகை தந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.