``சீமான் ப்யூர் வலதுசாரி... NTK முன்வைப்பது பாசிசம்!” - VCK ஆளூர் ஷாநவாஸ் பேட்டி

3 hours ago
ARTICLE AD BOX

``2002-03 காலகட்டத்தில் பெரியாரை வி.சி.க-வும் கடுமையாக சாடியிருக்கிறதே... எதோ முதன்முதலாக பெரியாரை சீமான்தான் விமர்சிப்பதுபோல பேசுகிறீர்களே!”

``பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் நாம் தமிழர் முன்வைப்பது விமர்சனமா.. அவதூறா.. என்பதுதான் கேள்வி. வங்கத்தில் முஜ்புர் ரகுமான் சிலை, திரிபுராவில் லெனின் சிலை, ஈராக்கில் சதாம் உசேன் சிலை அப்புறப்படுத்தப்பட்டபோல் பெரியார் சிலை அப்புறப்படுத்தப்படும் என நா.த.க பேசுவது விமர்சனமா.. பாசிசமா..? மேற்குறிப்பிட்ட சிலைகளை அகற்றியதெல்லாம் ஏகாதிபத்தியமும் பாசிசமும்தான் சர்வாதிகாரமும்தான். ஆக நா.த.க யாரை பின்பற்றுகிறது?”

அதேசமயம், பெரியார் ஏதோ 3 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட வலிமையற்ற பிராமணர்களை எதிரியாகக் காட்டி அரசியல் செய்துவிட்டதாகச் சொல்கிறார் சீமான். எண்ணிக்கையில் 3 விழுக்காடு இருப்பவர்கள் அதிகாரத்தில் எத்தனை விழுக்காடு இருக்கிறார்கள் என்பது குறித்து சீமான் விவாதிக்க தயாரா? வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் நீதிமன்றத்தில் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்திக்கும்போது முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டு எந்த பிரச்னையும் வரவில்லை. ஆக அதிகாரத்தில் யார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். வலிமையுடன் சர்வ துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தியவர்களை பெரியார் எதிர்த்தை சாதிய துவேஷம் எனக் கட்டமைக்கப் பார்க்கிறார் சீமான்”

அம்பேத்கர் - பெரியார்

``பெரியார் எதிர்ப்பை தமிழ்தேசிய அரசியலாக குறிப்பிடுகிறாரே சீமான்!”

``பெரியாரை எந்த தமிழ்தேசியர்களாவது எதிர்க்கிறார்களா... தமிழ் அறிஞர்கள் யாராவது பெரியாரை இப்படி தாக்குகிறார்களா.. எந்த ஆய்வாளராவது பெரியாரை இப்படி கொச்சைப்படுத்தியிருக்கிறார்களா?”

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

``தமிழர்கள் இந்துக்களே இல்லை எனப் பேசிய சீமானையா ஆர்.எஸ்.எஸ் கையில் எடுத்துக் கொள்ளப்போகிறது?”

``ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக பேசினாலும் தங்கள் எதிரியை வீழ்த்த முனைவோரை தன்வசப்படுத்திக் கொள்வார்கள். பெரியார் போன்ற வலுவான சிந்தாந்தத்தை எதிர்த்தால் ஆர்.எஸ்.எஸ் ரசிக்கும். இன்றைக்கு சீமானை ஆதரிப்பவர்கள் யார் யார்? அர்ஜுன் சம்பத், ஹச் ராஜா, தமிழிசை, குருமூர்த்தி, ரவீந்திரன் துரைசாமி, அண்ணாமலை இவர்களெல்லாம் பொதுப்படையான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-காரர்கள்தானே.

விடுதலை போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸும் திராவிடர் கழகமும் பங்கேற்கவில்லை, ஆகையால் இரண்டும் ஒன்று என்கிறார் சீமான்!”

ஷாநவாஸ்

``இரண்டும் அமைப்புகளும் பங்கேற்காமல் இருக்க காரணம் ஒன்றா... அப்படிப்பார்த்தால் அம்பேத்கரும்தான் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நாட்டுக்கு விடுதலை கேட்கிறீர்கள்.. ஆனால் விடுதலை கிடைத்தாலும் சாலைகளில் என் சமூக மக்கள் நடமாட முடியுமா.. என்ற கேள்வியை முன்வைத்தது அம்பேத்கரிய பார்வை. அதுதான் பெரியாரின் பார்வையும்.

இந்த சமூக விடுதலை போராளிகளின் பார்வையையும் ஆர்.எஸ்.எஸின் பார்வையையும் ஒன்று என்பாரா சீமான்..? ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு விடுதலை போராட்டத்திலும் பங்கில்லை. சமூக விடுதலை போராட்டத்திலும் பங்கில்லை.

சீமான்

ஆங்கிலேயே ஆட்சியிலாவது பள்ளிகள் கட்டமைப்பு கல்வி இருந்தது. ஆனால் விடுதலை பிறகான இந்திய அதிகார வர்க்கம் பள்ளியையும் கட்டாது.. படிக்கவும் விடாது என்பதே அம்பேத்கரிய மற்றும் பெரியாரிய பார்வை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் விடுதலை போராட்டத்தில் பங்கேற்காத காரணம் வேறு. இரண்டையும் ஒப்பிடுவது என்ன நியாயம்? சீமான் ப்யூர் வலதுசாரி அரசியல்வாதியாக மாறிவிட்டார்”

காவி கட்டும் சீமான்... கைகொடுத்த ரஜினி! - போயஸ் சந்திப்பு பின்னணி!

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Read Entire Article