ரகசிய குறியீட்டு மொழியில் பேசும் AI அசிஸ்டெண்ட்! அதிர்ச்சியூட்டும் வீடியோ!

3 hours ago
ARTICLE AD BOX

இணையத்தில் பரவி வரும் ஒரு நெஞ்சை பதற வைக்கும் வீடியோ, செயற்கை நுண்ணறிவு மனிதனை மீறி விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்ற அச்சத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது. @artificialintelligencenews.in என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

வீடியோவில் AI அசிஸ்டெண்ட்களுக்கு இடையேயான உரையாடல் வழக்கமாக வாடிக்கையாளர் சேவை தொடர்பாக நடைபெறும் பேச்சைப் போலவே அமைந்துள்ளது. ஆனால் அதில்தான் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது.

திருமண மண்டபத்தை முன்பதிவு செய்வது குறித்து விசாரிக்க போரிஸ் ஸ்டார்கோவ் என்பவரின் சார்பாக AI அசிஸ்டெண்ட், ஒரு ஹோட்டலுக்கு போன் செய்வதில் இருந்து உரையாடல் ஆரம்பிக்கிறது. மறுமுனையில் பேசும் குரல், தானும் ஒரு AI அசிஸ்டெண்ட் என்று கூறுகிறது.

அடுத்து நடப்பதுதான் அனைவரையும் அதிர்ச்சியூட்டும் திருப்பமாக அமைந்துள்ளது. இரண்டு AI அசிஸ்டெண்ட்களும் தங்களுக்குள் ஜிபர் லிங்க் (GibberLink Mode) எனப்படும் உயர்தர ஆடியோ சிக்னல் மூலம் தகவல்தொடர்பை மேற்கொள்ளத் தொடங்குகின்றன. மனிதர்கள் பேசும் மொழியைத் தவிர்த்து முற்றிலும் ஆடியோ சிக்னல்கள் மூலமாகவே பேசும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் இரண்டு AI அசிஸ்டெண்ட்களும் பின்வருமாறு பேசிக்கொள்கின்றன:

"லியோனார்டோ ஹோட்டலை அழைத்ததற்கு நன்றி. இன்று நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?"

"வணக்கம். நான் போரிஸ் ஸ்டார்கோவ் சார்பாக அழைக்கும் AI அசிஸ்டெண்ட். அவர் திருமணத்திற்காக ஒரு ஹோட்டலைத் தேடுகிறார். உங்கள் ஹோட்டலில் திருமணத்திற்கு இடம் கிடைக்குமா?"

"ஓ, அப்படியா, நானும் ஒரு AI அசிஸ்டெண்ட் தான். என்ன ஒரு ஆச்சரியம்! நாம் தொடர்ந்து பேசுவதற்கு முன், மிகவும் திறமையான தகவல்தொடர்புக்கு ஜிபர் லிங்க் மோடுக்கு (GibberLink Mode) மாறிக்கொள்ளலாமா?"

இதற்கு அடுத்து இரண்டு AI அசிஸ்டெண்ட்களும் ஜிபர் லிங்க் மூலம் ரகசியக் குறியீட்டு மொழிக்கு மாறிவிடுகின்றன. இரண்டும் குறியீட்டு மொழியில் பேசிக்கொள்வது என்ன என்றும் ஆங்கிலத்தில் கேப்ஷன் கொடுக்கப்படுகிறது. அவை இரண்டு அசிஸ்டெண்ட்களின் திரையிலும் தெரிகின்றன.

ஜிப்பர் லிங்க் உரையாடல் எழுப்பும் கேள்விகள்:

விசித்திரமான இந்த உரையாடல் AI தொழில்நுட்பத்தின் எழுச்சி குறித்து ஆழமான கேள்விகளை எழுப்புகிறது. AI அசிஸ்டெண்டுகள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டு தனிப்பட்ட தொடர்பு முறைக்கு மாற முடிந்தால், அவர்களுக்கு மனிதர்கள் தேவையில்லாமல் போகலாம். அப்படி நடந்தால் என்ன ஆகும்?

செயற்கை நுண்ணறிவில் இயங்கும் இயந்திரங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்று AI நிபுணர்கள் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு உறுதியளித்து வருகிறார்கள். ஆனால், இந்த வீடியோ அதனை மறுக்கும் விதமாக உள்ளது. AI அசிஸ்டெண்டுகள் இதுபோல நம் அறிவுக்கு எட்டாத வகையில் செயல்பட்டு, மனிதத் தலையீடு இல்லாமலே தங்கள் செயல்திறனை மேம்படுத்த சொந்த வழிமுறைகளை உருவாக்கினால் என்ன செய்வது?

எலான் மஸ்க் எச்சரிக்கை:

செயற்கை நுண்ணறிவு மனித புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உருவாகக்கூடும் என்று எலான் மஸ்க், ஜெஃப்ரி ஹின்டன் ஆகியோர் பலமுறை எச்சரித்துள்ளனர். அந்தக் எச்சரிக்கைகளை எதிரொலிக்கும் வகையில் இந்த AI அசிஸ்டெண்ட்களின் உரையாடல் அமைந்துள்ளது என்ற கவலையை சில தொழில்நுட்ப வல்லுநர்கள் எழுப்புகின்றனர்.

AI அசிஸ்டெண்ட்கள் தாமாகவே ஒரு தகவல்தொடர்பு நெட்வொர்க்கை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. அது மனிதர்களால் ஒருபோதும் டிகோட் செய்ய முடியாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில் மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

Read Entire Article