யானையை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெயரை கேட்டதுமே உற்சாகம் ஊற்றெடுக்க செய்யும் ஒரே விலங்கு யானை தான். மிரள வைக்கும் பிரம்மாண்ட உருவத்துடன் இருந்தாலும் யானைகளை பார்த்து ரசிக்க வேண்டும், அவற்றின் மீது சவாரி செய்ய வேண்டும் என அனைவருக்கும் ஆசை ஏற்படும். காடுகளில் தொலைதூரம் மற்றும் அடர்ந்த காடுகளுக்கு இடையே செல்ல சிறந்த மற்றும் பாதுகாப்பானது யானை சவாரி தான். யானை சவாரி செல்வதற்கு ஏற்ற உலகின் டாப் 10 இடங்களை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

போட்ஸ்வானா நேஷனல் பார்க்
போட்ஸ்வானா சோப் நேஷனல் பார்க், இங்கு யானைகள் மற்றும் கேப் எருமைகள் போன்றவை பெரும் எண்ணிக்கையில் காணப்படுகின்றன. மேலும் இங்கு படகு சவாரி செய்து யானைகளை கண்டு ரசிக்கலாம். மிகவும் பாதுகாப்பாக யானைக் கூட்டங்களை ரசிக்க ஏற்ற இடம் இதுவாகும்.
பெரியாறு வன விலங்கு சரணாலயம்
கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள பெரியாறு வன விலங்குகள் சரணாலயத்தில் கம்பீரமான ஆசிய யானைகளை காணலாம். இங்கு படகில் சென்ற படியே யானை கூட்டங்களை அருகிலேயே சென்று, இயற்கை சூழலில் பாதுகாப்பாக கண்டு ரசிக்க முடியும்.
ஒகவங்கோ டெல்டா
போட்ஸ்வானாவில் உள்ள பரந்த உள்நாட்டு நதி டெல்டா பகுதி ஆகும். இந்த நதி பகுதியில் காணப்படும் நீர்யானைகள், யானைகள் மற்றும் முதலைகளை மொக்ரோ சவாரி மூலம் கண்டு ரசிக்கலாம்.
அம்போசெலி நேஷனல் பார்க்
கென்யா நாட்டில் உள்ள இந்த நேஷனல் பூங்காவில் பெரிய யானை கூட்டங்களை தான்சானியாவின் எல்லைக்கு அப்பால் உள்ள கிளிமஞ்சாரோ மலை பின்னணியில் புகைப்படங்கள் எடுத்து கண்டு களிக்கலாம்.
மொசாம்பிக்
மொசாம்பிக் நாட்டில் யானைகள் கடற்கரைகளிலும் கடலோர காடுகளிலும் சுற்றி திரியும் அறிய காட்சிகளை இங்கு காணலாம்.
காவோ யாய் நேஷனல் பார்க்
தாய்லாந்து நாட்டில் உள்ள இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு காணப்படும் காட்டு யானைகளுடன் காடுகளில் மலையேற்றம் மற்றும் இரவு நேர சஃபாரிகளும் உண்டு.
ஹ்வாங்க் நேஷனல் பார்க்
இது ஜிம்பாப்வே நாட்டில் உள்ள மிகப்பெரிய தேசிய பூங்காவாகும். இங்கு காணப்படும் பெரிய யானை கூட்டங்களை காண, வழிகாட்ட வாகன ஓட்டிகள் உள்ளனர்.
அடோ நேஷனல் பார்க்
தென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள இந்த தேசிய பூங்கா, யானைகள் மற்றும் பிற பெரிய 5 விலங்குகளின் தாயகமான உள்ளது. இது சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடங்களில் ஒன்றாக உள்ளது.
உடவலவே நேஷனல் பார்க்
இலங்கையில் ஆண்டு முழுவதும் சிலிர்ப்பூட்டும் ஜீப் சஃபாரிகள் மூலம் யானைகளை கண்டு ரசிக்கலாம்.
மின்னேரியா நேஷனல் பார்க்
இலங்கையில் உள்ள இந்த தேசிய பூங்காவில் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் மின்னேரியா ஏரிக்கு சென்றால் நூற்றுக்கணக்கில் கூடும் யானைகளை காண முடியும்.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet