ARTICLE AD BOX
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பில், பிரதமா் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த பிப். 13 ஆம் தேதி அமெரிக்கா சென்றார்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றப் பின் மோடியின் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும்.

இதையும் படிக்க: பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!
டிரம்ப் பதவியேற்றப் பின்னர் அமெரிக்கா செல்லும் மிக முக்கியத் தலைவர்களுள் ஒருவராக மோடியும் சென்றார். அமெரிக்கா பயணத்தில் பிரதமா் மோடி, இந்தியாவில் கல்வி வளாகங்களைத் தொடங்க அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில், இருதரப்பு வரத்தக உறவை மேம்படுத்துவது குறித்து மட்டுமின்றி, உயா்கல்வியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.
அப்போது, ‘அமெரிக்க அதிபா் டிரம்ப் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இரு நாடுகளிடையேயான நட்புறவில் இந்தப் பேச்சுவாா்த்தை குறிப்பிடத்தக்க தருணமாக அமையும்’ என்று பிரதமா் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்தாகவில்லை என்று வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம்(RTI) பதில் அளித்துள்ளது.