மருத்துவமனை Bill-ஐ பார்த்தவுடன் கோமாவில் இருந்து எழுந்த இளைஞர்! வைரலாகும் வீடியாே..

2 hours ago
ARTICLE AD BOX

Man Wakes Up From Coma Viral Video : தினந்தோறும், நம்ப முடியாத விஷயங்களை இணையத்தின் வாயிலாக பார்த்தும் கேட்டும் வருகிறோம். உதாரணத்திற்கு, சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் உயிருடன் எழுந்து வருவது, பிழைக்கவே மாட்டார் என்று கூறப்பட்ட நபர் நெடுங்காலம் வாழ்வது போன்ற விஷயங்கள் இந்த உலகில் அரங்கேறி வருகிறது. அப்படி, ஒரு நபர் கோமாவில் இருந்த போது மருத்துவமனை பில்-ஐ பார்த்த பின்பு எழுந்து தப்பியோடிய விவகாரம் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளைஞருக்கு அடி..

சண்டையில் அடிப்பட்டு, பண்டி நினாமா என்ற இந்த நபர் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு முதுகெலும்பில் அடிப்பட்டு இருப்பதாக கூறி, அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து இருக்கின்றனர். இதனால், இவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதோடு இதற்காக ரூ.1 லட்சம் கட்ட வேண்டும் என்றும்  கூறியிருக்கின்றனர். இதையடுத்து, இவரது குடும்பத்தினரும் பணத்தை ஆங்காங்கே கடன் வாங்கி ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

கோமாவில் இருந்து எழுந்த இளைஞர்..?

அடிப்பட்டதாக சொல்லப்பட்டு ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பண்டி என்ற அந்த நபர், திடீரென அந்த அறையில் இருந்து வெளியே எழுந்து நடந்து வருவதை சிலர் பார்த்துள்ளனர். இவரிடம் கோமாவில் இருந்ததற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை, பெரிதான எந்த அடியும்படவில்லை. தனக்கு எதுவுமே நடக்காதது போல அந்த நபர் எழுந்து நடந்து வந்திருக்கிறார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jist (@jist.news)

அதன் பிறகுதான் பலருக்கும் உண்மை என்ன என்பதே தெரிந்திருக்கிறது. இது குறித்து வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த நபரை எழுந்திருக்க விடாமல் மருத்துவமனையை சேர்ந்த 5 பேர் பிடித்து வைத்திருந்ததாக அந்த இளைஞர் கூறுகிறார். குடும்பத்தாரிடம் இருந்து பணம் வந்த பின்பு உன்னை விட்டுவிடுவோம் என்று அவர்கள் தன்னை மிரட்டியதாகவும் அந்த நபர் கூறியிருக்கிறார். ஐசியூ-வில் இருந்து தப்பித்த பிறகு அந்த நபர் இந்த விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, பண்டியின் மனைவி மற்றும் தாயும் தனது மகனின் சிகிச்சைக்காக பல்வேறு மருந்து மாத்திரைகள் வாங்கி வர வேண்டும் என தங்களிடம் மருத்துவர்கள் கூறியதாகவும் பேசியிருக்கின்றனர். இதனால்தான் அவர்கள் மீது நம்பிக்கை எழுந்ததாக கூறியிருக்கின்றனர். தற்போது அந்த இளைஞர் மற்றும் எழுந்து வரவில்லை என்றால், மருத்துவமனை நிர்வாகம் அவர்களை நன்றாக ஏமாற்றி இருக்கும் என சிலர் இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் கோபம்:

இந்த இளைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர் இது குறித்த தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்படி தனியார் மருத்துவனையில் அசம்பாவிதங்கள் நடந்தால், எந்த இடத்திற்கு சென்று பாதுகாப்பையும் நல்ல மருத்துவத்தையும் எதிர்பார்ப்பது? என்று கேட்டு வருகின்றனர். மேலும், இப்படி ஒன்றும் தெரியாமல் வரும் நோயாளிகளிடமும் அவர்களின் குடும்பத்தாரிடமும் சில தனியார் மருத்துவமனை நிர்வாகம் நன்றாக பணம் வசூலிப்பதாகவும் கூறுகின்றனர். எனவே, மக்களை உஷாராக இருக்குமாறும் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஓடும் ரயிலில் முத்தம் கொடுத்த நபர்! வைரலாகும் வீடியோ..

மேலும் படிக்க | பெற்ற தாயை அடித்து-கடித்து சித்திரவதை செய்த மகள்! வைரலாகும் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article